Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 ஜூலை, 2021

மெச்சூரிட்டி என்பது யாதெனில்... இன்றைய தத்துவம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------

கொசு : அப்பறம்... சொத்துல எப்போ பங்கு பிரிப்பீங்க?
ராஜா : உனக்கு எதுக்கு பங்கு தரணும்?
கொசு : பின்ன... உங்க ரத்தம் என் உடம்புலயும் ஓடுதுல்ல...
ராஜா : 😳😳
-------------------------------------------------------
டீச்சர் : என்னடா? இன்னைக்கு உன்னோட ஹோம்வொர்க்க பாத்தா... உங்க அப்பா கையெழுத்து மாதிரி இருக்கே...
மாணவன் : எங்க அப்பாவோட பேனால எழுதுனேன்... அதான்...
டீச்சர் : 😬😬
-------------------------------------------------------
இன்றைய தத்துவம்...!!
-------------------------------------------------------
மெச்சூரிட்டி என்பது யாதெனில்... ஐந்து தோசை சாப்பிட்டு ஆறாவது தோசைக்கு வெயிட் பண்ணும்போது... கிச்சன்ல கரண்டி விழும் சத்தம் கேட்டு கை கழுவுவது...😇😇

லட்டு உடைஞ்சுருச்சேன்னு வருத்தப்படாம... பூந்தி கிடைச்சிருச்சேன்னு சந்தோஷப்படுங்க... இதுதான் வாழ்க்கை...!!😎😎

வேலை தேடி தேடி ஓய்ந்து போன உங்களுக்கு இனி கவலை வேண்டாம்.

-------------------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
-------------------------------------------------------
🌟 எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள். கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்..

🌟 முள்ளை அகற்றினால் தான் சுளைகளை சுவைக்க முடியும். கொட்டு வாங்கினால் தான் தேனை ருசிக்க முடியும். தோல்விகளைக் கடந்தால் தான் வெற்றியை ரசிக்க முடியும். 

🌟 தோல்வி அடையக்கூடாது என்ற பயத்துடன் உழைக்காதீர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் மகிழ்ச்சியாய் உழைத்திடுங்கள். 

🌟 முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்
-------------------------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------------------------
1. நடந்தவன் நின்றான், கத்தியை எடுத்து தலையைச் சீவினேன், மறுபடியும் நடந்தான். அவன் யார்?

2. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? 

விடை :

1. பென்சில்✏ 

2. விறகு🔥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக