Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 10 ஜூலை, 2021

என்ன சாரே- ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்த சாம்சங்: இனி இதான் விலை- காரணம் தெரியுமா?

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு

ஸ்மார்ட்போன்கள் பல்வேறு தேவைகளுக்கும் பிரதான பயன்பாடாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா பூட்டுதல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவை கட்டாயமாக இருக்கிறது. மேலும் டிஜிட்டல் இந்தியாவின் நடவடிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்து இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் தேவையை எடுத்துரைப்பதில் வியப்பில்லை. ஏராளமானோர் தற்போது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு

இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறித்து பார்க்கையில், அது சியோமி, சாம்சங், விவோ, ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகும். இதில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் கடந்த வாரம் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தின. இதைதொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தங்களது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தியுள்ளது.

எஃப் 02 எஸ், எம் 02 எஸ் மற்றும் ஏ12

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ், சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஆகிய சாதனங்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டுள்ளன. மூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விலையும் பெரிய அளவு அதிகரிக்கவில்லை என்றாலும் அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாம்சங் விலை உயர்வை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் மூன்று சாதனங்களின் விலையும் தற்போது சாம்சங் இந்தியா வலைதளத்தில் பிரதிபலிக்கின்றன.

உலகளாவிய சிப் பற்றாக்குறை

தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகிறது, இதற்கான பெரிய காரணம் உலகளாவிய சிப் பற்றாக்குறையே என கருதப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ், கேலக்ஸி எம் 02 எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 ஆகிய மூன்று சாதனங்களும் 2021 ஆம் ஆண்டில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 விலை குறித்து பார்க்கையில், கேலக்ஸி எஃப் 02 எஸ் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு சாதன விலை ரூ.8,999 என இருந்த நிலையில் தற்போது ரூ.9499 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.9999 ஆக இருந்த நிலையில் தற்போரு ரூ.10499 ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்02 விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்02 விலை குறித்து பார்க்கையில், சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் சாதனத்தின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.8999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.500 விலை அதிகரிக்கப்பட்டு ரூ.9499 ஆக இருக்கிறது. மேலும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை குறித்து பார்க்கையில் இதன் விலை ரூ.9999 ஆக இருந்த நிலையில் ரூ.10499 ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகவும் இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என வருகிறது. இதன் ஒரு வேரியண்ட் விலை ரூ.12999 ஆக இருந்த நிலையில் இதன் விலை உயர்த்தப்பட்டது தற்போது ரூ.13499 ஆக இருக்கிறது. மேலும் ரூ.13999 ஆக இருந்த ஸ்மார்ட்போன் விலை தற்போது ரூ.14499 ஆக இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ ஸ்மார்ட்போன் விலை அதன் அறிமுகத்திற்கு முன்னதாகவே 360டிகிரி ரெண்டரில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. சாம்சங் எஃப்இ ஸ்மார்ட்போன்களை போன்ற வர விருக்கும் ஃபேன் எடிஷன் எஃப்இ ஸ்மார்ட்போனும் வெண்ணிலா கேலக்ஸி எஸ்21 உடன் வடிவமைப்பில் ஒத்ததாக இருக்கிறது. இதன் விலை ரூ.71998 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக