கூகுள் பிக்சல் 6
வெளிவந்த தகவலின்படி பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல் செல்பீ ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுடன் 6.4 இன்ச் எஃப்.எச்.டி டிஸ்பிளே அமோலேட் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தசாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்சிறந்த பாதுகப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
புதிய கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 SoC-ஐப் போலவே சக்திவாய்ந்ததாக கூறப்படும் தனித்துமான கூகுள் சிப்செட் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் விலையும் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். இதுதவிர பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்றும், செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிக்சல் 6 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4614 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 6 ப்ரோ
கூகுள்
பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.71-இன்ச் கியூஎச்டி + ஓஎல்இடி
டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த பிக்சல் 6 ப்ரோ
ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி/256 ஜிபி /512 ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.
பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதாவது 50எம்பி வைடு லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த புதிய ஸமார்ட்போன்.
இந்த கூகுள் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் போலவே சக்திவாய்ந்த கூகுள் நிறுவனத்தின் தனித்துவமான சிப்செட் இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த இரண்டு சாதனங்களும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளைஉருவாக்கியுள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனை விட தனித்துவமான வசதிகளுடன் கூகுள் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக