Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 ஜூலை, 2021

ரொம்ப சிம்பிள்... இதை செய்தால் உங்க வண்டி மைலேஜை வாரி வழங்கும்... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளுக்கு இந்த செய்தி நிச்சயமாக உற்சாகம் அளிக்கும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக ஒவ்வொரு மாதமும் பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் நடுத்தர வர்க்க மக்கள் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில், வாகனங்களின் மைலேஜை அதிகரிக்கும் ஒரு கண்டுபிடிப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா? ஆனால் இது உண்மையில் நடந்துள்ளது. ஐதராபாத் நகரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர், வாகனங்களுக்கான மைலேஜ் பூஸ்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த மைலேஜ் பூஸ்டர், எரிபொருளை சேமிக்கும் என்பதுடன், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

டேவிட் எஸ்கால் என்பவர்தான் இந்த அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர். 5M மைலேஜ் பூஸ்ட் என்ற கண்டுபிடிப்பை அவர் உருவாக்கியுள்ளார். மிக நீண்ட காலமாகவே அவர் கண்டுபிடிப்பு துறையில் இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 5M என்பது இந்த மைலேஜ் பூஸ்டரால் கிடைக்கும் 5 நன்மைகளை குறிக்கிறது.

அந்த 5 நன்மைகள் பின்வருமாறு:

1. ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் கூடுதல் மைலேஜ்

2. வாகனங்களில் அதிக பிக்அப்

3. டிரைவிங்கில் அதிக ஸ்மூத்னெஸ்

4. அதிக டார்க் மற்றும் உந்துதல் திறன்

5. மாசு கட்டுப்பாடு

இது தொடர்பாக டேவிட் எஸ்கால் கூறுகையில், ''இந்த 5M மைலேஜ் பூஸ்ட் தொழில்நுட்பத்தை வாகனங்களின் இன்ஜின்களில் பயன்படுத்தலாம். இதற்கு இன்ஜினை திறக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. 5M மைலேஜ் பூஸ்ட் இயந்திரத்தை வாகன இன்ஜினுடன் இணைக்கும்போது நிறைய பலன்கள் கிடைக்கும்'' என்றார்.

கடந்த 2014ம் ஆண்டே மைலேஜ் பூஸ்டரை கண்டுபிடித்து விட்டதாக டேவிட் எஸ்கால் கூறியுள்ளார். ஆனால் கடந்த 2008ம் ஆண்டில் இருந்தே, வாகனங்களின் மைலேஜை அதிகரிப்பதுடன், முடிந்த அளவிற்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும் வேலைகளில் அவர் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை சுமார் 8 ஆயிரம் வாகனங்களின் இன்ஜின்களை பூஸ்ட் செய்திருப்பதாக டேவிட் எஸ்கால் குறிப்பிட்டுள்ளார். இதில், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை அடங்கும். சில சமயங்களில் பேருந்துகள் மற்றும் லாரிகளின் இன்ஜின்களை பூஸ்ட் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

100 சிசி முதல் 10,000 சிசி வரையிலான திறன் கொண்ட எந்தவொரு வாகனத்திலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் எனவும் டேவிட் எஸ்கால் கூறியுள்ளார். இதுகுறித்து டேவிட் எஸ்கால் கூறுகையில், ''பொதுவாக எந்தவொரு எரிபொருளில் இருந்தும் வாகனம் 100 யூனிட் ஆற்றலை எடுக்கும்போது, 12.6 யூனிட்கள் மட்டுமே வாகனம் ஓடுவதற்காக சக்கரங்களுக்கு வழங்கப்படுகிறது.

எஞ்சிய ஆற்றல் வீணாகி விடுகிறது. ஆனால் எங்களது கண்டுபிடிப்பானது, குறைந்த ஆற்றலை மட்டுமே பயன்படுத்தும் வகையில் வாகனங்களை மாற்றுகிறது'' என்றார். டேவிட் எஸ்காலின் இந்த கண்டுபிடிப்பு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக சமூக வலை தளங்களில் டேவிட் எஸ்காலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது ஒரு லிட்டர் எரிபொருள் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அத்துடன் வாகன பெருக்கத்தால் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும், டேவிட் எஸ்காலின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக