Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 ஜூலை, 2021

இந்தியாவில் வந்திறங்கிய ரஷ்ய ‘ஷெர்ப்’ வாகனங்கள்!! நிலத்திலும் செல்லும், நீரிலும் மிதக்குமாம்!

நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய வாகனங்களை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் சிலர் தான் நேரில் பார்த்திருப்பீர்கள். இவை தண்ணீரிலும் மிதக்கக்கூடியவைகளாக விளங்குவதால் இத்தகைய வாகனங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் இந்த வாகனங்கள் இந்தியாவை காட்டிலும் வெளிநாடுகளில் தான் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதிலும் ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் இத்தகைய வாகனங்கள் இரண்டாம் உலக போரில் இருந்தே செயல்பாட்டில் உள்ளன.

இந்த வகையில் ரஷ்யாவில் இவ்வாறான வாகனங்களை விற்பனை செய்யும் பிராண்ட், செர்ப். இந்த பிராண்ட் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு வீடியோக்களை வெளியிட்டு அதன் இந்திய வருகையை வெளிக்காட்டி உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில், அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 5ல் இருந்து ஜூலை 10ஆம் தேதி வரையில் ஹரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் ஆர்வலர்கள் ஷெர்ப்பின் பயண அனுபவத்தை அவர்களது வாழ்விடத்திலேயே பெற வேண்டும் என இந்த ரஷ்ய பிராண்ட் விரும்புகிறது. இந்த ஷெர்ப் வாகனங்களின் அடையாளமே அவற்றின் பிரம்மாண்டமான 63 இன்ச் டயர்கள் தான்.

டயர்கள் நன்கு பெரியதாக இருப்பினும், வாகனத்தின் உட்புறத்தில் கேபின் சிறியதாகவே உள்ளது. டயர்கள் தான் ஷெர்ப் வாகனத்திற்கு அகலம், உயரம், நீளம் என அத்தனை பரிமாண அளவுகளையும் வழங்கக்கூடியவைகளாக உள்ளன.

ஷெர்ப்பின் நீளம் 3,400மிமீ, அகலம் 2.520மிமீ மற்றும் உயரம் 2,300மிமீ ஆகும். மேலும் இந்த டயர்கள் அதிகப்படியான டிராக்‌ஷனை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு மணல் குன்றின் மீதும் ஏறுவது இந்த ரஷ்ய வாகனத்தில் எளியதாகும்.

அதுமட்டுமின்றி வாகனம் கவிழுவதற்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என கூறுகிறது, தயாரிப்பு நிறுவனம். இயக்க ஆற்றலை வழங்க ஷெர்ப்பில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 45 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக