Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஜூலை, 2021

உடல் எடை குறைந்தால் பரிசு.. பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு

நாட்டில் உடல் எடை குறைந்தால் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இது குறித்த முழுதகவல்களை கீழே காணுங்கள்

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் சரியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு பரிசு தொகை அறிவித்துள்ளது.

இதற்காக அந்நாட்டு அரசாங்கம் ஒரு ஆப் ஒன்றை தயாரித்துள்ளது. அதன் படி அந்த ஆப் அனைத்து சூப்பர் மார்கெட் சாப்ட்வேருடன் இணைக்ப்படுகிறது. அதில் யார் அதிகமாக காய்கறிகள் பழங்கள் வாங்கிவிட்டு ஆரோக்கியமற்ற பொருட்களை வாங்க மறுக்கிறார்களோ அவர்களுக்கான தள்ளுபடியை அந்நாட்டு அரசு தருகிறது.

இந்த ஆப் தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை பயன்படுத்துபவர்களுக்கு லால்டி பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது அதை பயன்படுத்தி அவர்கள் டிஸ்கவுண்ட்கள், இலவச டிக்கெட்கள், ஆகியவற்றை பெற்றுக்கொள்ளலாம், இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமுலுக்கு வருகிறது.


இந்த திட்டத்தை அந்நாட்டு மக்கள் பலர் அதிக உடல் எடையுடன் இருப்பதால் அவர்களுக்கு எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ வழி வகை செய்யும் வகையில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!