Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஜூலை, 2021

Resume-ல் இருந்த ஒரே வார்த்தை- மிரண்டு நேர்காணலுக்கு அழைத்த நிறுவனம்: விவாதமே நடக்குது!

இயல்பு நிலைக்கு திரும்பி வரும் பகுதிகள்டுவிட்டரில் கேட் மெக்கீயின் என்பவர் பதிவிட்டிருந்த டுவிட் இணையத்தில் பெருமளவு வைரலானது. காரணம் இந்த டுவிட்டில் இருந்த கருத்துக்கு ஏராளமான பயனர்களிடம் இருந்து கருத்துகளை பெற்றுள்ளது. சிலர் இந்த திறன் குறித்து விவாதங்களையே தொடங்கி இருக்கின்றனர்.
 
அதிகரித்த வேலையிழப்பு நடவடிக்கை

கொரோனா தாக்கம் உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது என்றே கூறலாம். உச்சத்தில் இருந்தவர்கள் கூட திடீரென வேலையிழக்கும் நிலை ஏற்பட்டது. ஏணைய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது புலம்பெயர்ந்த ஊர்களில் இருந்து காலிசெய்து சொந்த ஊருக்கு திரும்பினர். குறிப்பாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதேபோல உலகளவில் வேலையிழப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பி வரும் பகுதிகள்

இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையில்லாத நிலையில் மீண்டும் வேலையை தேட தொடங்கியுள்ளனர். புலம்பெயர்ந்த வேறு ஊருக்கு சென்று மீண்டும் குடும்பத்தோடு குடியேறுவதற்கு பதிலாக சொந்த ஊரிலேயே தங்களது அனுபவத்திற்கு ஏற்ப வேலை இருக்கிறதா என பலர் தேடத் தொடங்கி வருகின்றனர்.

ஆர்வத்தோடு வேலைத்தேடும் நடவடிக்கை

பல்வேறு நபர்களும் ஆர்வத்தோடு வேலைத்தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது திறமையை வளர்த்துக் கொண்டும் அதை குறிப்பிட்டும் வேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்னஞ்சல் மூலமாக பயோடேட்டா அனுப்பவது வீடியோ கால் இன்டர்வியூ என தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை பல கட்டத்துக்கு முன்னேற்றி வருகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனம் எங்கு இருக்கு என்பதே தெரியாமல் மின்னஞ்சல் ரெஸ்யூம், ஆன்லைன் இன்டர்வியூ, வீட்டில் இருந்தே வேலை என்ற நிலையில் இருக்கிறோம். வேலைவாய்ப்பை பெறுவதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

"GOOGLING" என்ற வார்த்தை

அதன்படி வெளிநாட்டில் ஒருவர் வேலையில் சேருவதற்கான நடவடிக்கையாக தனது பயோடேட்டாவை ஒரு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்த அந்தநிறுவனத்தின் ஹெச்ஆர் அதில் குறிப்பிட்டிருந்த ஒரு வார்த்தையை பார்த்து வியந்து அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளார். அந்த வார்த்தை குறித்து பார்க்கையில், அந்த நபர் தனது பயோடேட்டாவில் தனித்திறன்களில் ஒன்றாக "GOOGLING" என குறிப்பிட்டுள்ளார்.

Cat McGee பதிவிட்ட டுவிட்

நிறுவன அதிகாரிகள் இந்த வார்த்தையை பார்த்து வியந்து அந்த நபரை நேர்காணலுக்கு அழைத்துள்ளார். இந்த நிகழ்வை Cat McGee என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கூகுளிங் என்பது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி தகவல்களை முறையாக பெறும் உலாவிச் செயலாகும். Cat McGee பதிவிட்ட டுவிட்டுக்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீடுவிட்

இவரது டுவிட்டில்., சிலர் கூகுளில் முறையாக தகவல்களை கூட திரட்ட தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். இவரது டுவிட்டுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கமெண்ட்கள் செய்திருக்கின்றனர். இதில் சிலர் கூகுளிங் என்பது சராசரியாக அனைவரும் மேற்கொள்ளும் செயல் இது எப்படி தனித்திறமையாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது கூகுளிங் என்ற வார்த்தை பேசுபொருளாக மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக