Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

13எம்பி கேமரா, குவால்காம் சிப் வசதியுடன் அறிமுகமாகும் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்.!

டெவலப்பர்களிடமிருந்து

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலிவு விலையில் இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் XDA டெவலப்பர்களிடமிருந்து ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி ஜியோபோன் நெக்ஸ்ட் தனிப்பயன் துவக்க அனிமேஷனைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு மற்ற ஸ்மார்ட்போன்களில் இருக்கும்அனைத்து அம்சங்களும் இதிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதபோல் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த 1440x720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்என XDA டெவலப்பர் Mishaal Rahman தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தில் எச்டிஆர் ஆதரவும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்த குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்டின் அதிகாரப்பூர்வ படங்களின்படி, ஸ்மார்ட்போனில் எளிதில் திறக்கக்கூடிய பேக் கேஸ் இருக்கும், எனவே இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 3000 எம்ஏஎச் அல்லது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் JioPhone மற்றும் JioPhone 2 ஐப் போலன்றி, JioPhone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனம் ஆனது வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் ரூ.5000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக