
பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு WHO அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆலோசனை செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya), வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனை சந்தித்து ஆலோசனை செய்தார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில் வெளியிட்ட செய்தியில், இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக கூறிய அவர், COVID19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டினார்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது, சுவாமிநாதன் தற்போதைய கோவிட் -19 தொற்றுநோயின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் புனேவின் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து ஐதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது.
அவசரகாலப் பயன்பாட்டுப் பட்டியலுக்கு (EUL) தேவையான அனைத்து ஆவணங்களும் கோவாக்ஸினுக்கான பாரத் பயோடெக் மூலம் ஜூலை 9 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பாய்வு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார இணை அமைச்சர் டாக்டர். பாரதி பிரவின் பவார் கடந்த மாதம் மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.
முன்னதாக, கோவக்ஸின் தடுப்பூசி உற்பத்தி நடைமுறை மிக சிறப்பாக உள்ளதாக ஹங்கேரிய அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிக்கு இந்த ஒப்புதல் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
சுவாமிநாதன், தடுப்பூசியால் பல்வேறு வகையான வைரஸ் திரிபுகளுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாவிட்டாலும், அது நிச்சயமாக தொற்றால் ஏற்படும் இறப்பு மற்றும் உடல நல பிரச்சனைகளின் அபாயத்தைக் பெரிதளவு குறைக்கும் என்றார்.
கோவிட் -19 க்கு எதிரான இந்தியாவின் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை பாராட்டிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், வரும் காலங்களிலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கும் என்றார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவாக்ஸின் டெல்டா மற்றும் கோவிட் -19 இன் மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கடந்த வாரம் தனது ஆய்வில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக