Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 11 ஆகஸ்ட், 2021

மழையில் நனைந்தபடி ஹாயாக பயணித்த இளைஞர்கள்... ரூ. 62 ஆயிரம் அபராத செல்லாணை வாரி வழங்கிய போலீஸ்! தரமான சம்பவம்!

 மழையில் நனைந்தபடி ஹாயாக பயணித்த இளைஞர்கள்... ரூ. 62 ஆயிரம் அபராத செல்லாணை வாரி வழங்கிய போலீஸ்!

மழையில் நனைந்தபடி காரில் ஹாயாக சென்ற இளைஞர்களுக்கு காவல்துறையினர் ரூ. 62 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர். இச்சம்பவம்குறித்த மேலும் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

மழையில் நனைந்தபடி காரில் ஹாயாக பயணித்ததற்காக இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். நடவடிக்கையின் அடிப்படையில் இளைஞர்களுக்கு ரூ. 62 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் நகர போலீஸாரே இந்த அதிரடி சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். பொது சாலையில் வாகன ஸ்டண்ட் செயலில் ஈடுபடுவது விதிமீறல் செயலாகும். இந்த செயலில் ஈடுபடும் வகையிலேயே இளைஞர்களின் பயணம் அமைந்திருக்கின்றது.

இளைஞர்கள் காரின் ஜன்னலில் அமர்ந்தபடி மழையில் நனைந்திருக்கின்றனர். இவ்வாறு பொது சாலையில் பயணிப்பது வாகன ஸ்டண்டிற்கு இணையான செயலாகும். இவ்வாறான பயணம் அவர்களுக்கு மட்டுமின்றி அவ்வழியாக வரும் பிற வாகனங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

எனவேதான் இந்த செயலுக்கு மிக அதிகபட்ச அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையிலேயே காசியாபாத் நகர காவல்துறையினர் மிக அதிகபட்சமாக ரூ. 62 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை இளைஞர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இளைஞர்கள் குழுவமாக மூன்றுக்கும் மேற்பட்ட கார்களில் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால், அதில் குறிப்பிட்ட சில கார்களில் இருந்தவர்கள் மட்டுமே இவ்விதிமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகையால், அவர்கள் மீது மட்டும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கும் குறைவானவர்கள். மேலும், சிலரிடத்தில் ஓட்டுநர் உரிமம்கூட இல்லை என்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கின்றனர்.

இதனால்தான் அபராதம் மிக அதிகபட்சமாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இந்த செயலை மற்ற வாகன ஓட்டிகள் யாரும் செய்யக் கூடாது என்பதற்காகவே காசியாபாத் நகர காவல்துறையினர் இளைஞர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

இளைஞர்கள் பயணத்தின்போது சைரன் ஒலியை எழுப்பியவாறு சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழும்பியிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் செல்லும் வாகனங்களில் இருந்து சைரன் சத்தம் வெளிவருவதை நம்மால் கேட்க முடிகின்றது.

சைரன் ஒலியை ஆம்புலன்ஸ், காவல் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். இந்த விதியை இளைஞர்கள் மீறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள்கூட சைரனை பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இளைஞர்கள் விளையாட்டாக சைரனைப் பயன்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து, சாலையில் பயணிக்கும்போது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடர்பாடு செய்யும் வகையில் வளைந்து நெளிந்து அவர்கள் பயணித்திருக்கின்றனர்.

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பயணித்திருக்கின்றனர். இவையனைத்தும் கண்டிக்கதக்க குற்றங்களாகும். எனவேதான் இளைஞர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்திய அனைத்து கார்கள் மீதும் காவல்துறையினர் கடும் நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

இந்த நடவடிக்கையானது இணையத்தில் வைரலாகிய வீடியோவின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல் செயலை இளைஞர்கள் கடந்த ஞாயிறன்று செய்திருக்கின்றனர். இச்செயலை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

இவ்வீடியோ அதிகப்படியானோரால் பகிரப்பட்டிருக்கின்றது. இவ்வாறே காவலர்களின் கண்களில் வீடியோ பட்டுள்ளது. இதுபோன்று வைரல் வீடியோக்களின் அடிப்படையில் காவலர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொள்வது முதல் முறையல்ல.

மிக சமீபத்தில் ராயல் என்பீல்டு பைக்கில் இளம் ஜோடிக்கள் அத்துமீறும் வகையில் பயணித்ததற்காக போலீஸாரின் கடும் நடவடிக்கைக்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி, மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா கார் உரிமையாளர் மீதும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை வைரல் வீடியோவின் அடிப்படையில் எடுத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக