
நல்ல அறுவடைக்கு அதிர்ஷ்டம் அல்லது சாதகமான வானிலை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான விவசாயிகள் சிறந்த தொழில்நுட்பங்களை அணுகுவதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். மேலும் இந்த தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயம் மேற்கொள்வதற்கு அதிகம் செலவிடத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் சிறந்த தொழில்நுட்பங்கள்
நல்ல அறுவடைக்கு அதிர்ஷ்டம் அல்லது சாதகமான வானிலை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான விவசாயிகள் சிறந்த தொழில்நுட்பங்களை அணுகுவதன் மூலம் சிறப்பாக செயல்பட முடியும். இந்திய பண்ணையில் அதிக தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய பல்வேறு சாத்தியக் கூறுகள் உண்டாகி இருக்கின்றன. விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதை அதிகரிக்க புதுமையான நிதி ஏற்பாடுகள் மற்றும் மைக்ரோ கடன்கள் தேவைப்பட்டிருக்கலாம் அதுவும் தற்போது இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
வெங்காயம் மற்றும் பூண்டு சாகுபடி
இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பார்க்கையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி 33 வயதான ஆஷிஷ் சரியா பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகிறது. இவர் தனது 17 ஏக்கர் விளைநிலத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சாகுபடி செய்து வருகிறார். இவர் பூச்சிகள் மற்றும் வானிலை சிக்கல் பெரும்பிரச்சனையாக இருந்துள்ளது.
42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை
கக்னாரியா கிராமத்தில் கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும். அங்கு அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாக இருக்கிறது. எனவே மண்ணின் ஈரப்பதத்தின் அளவைப் புரிந்து கொண்டு சரியாக விதைப்பது என்பது நன்கு கலை ஆகும். தொடர்ச்சியான சோதனை மற்றும் பிழைகளுக்கு பிறகு கிராமியோபோன் என்ற அக்ரிடெக் தொடக்கத்தின் உள்ளூர் பிரதிநிதி அவரை அணுகினார். இதன்பின் திடமான சாத்தியக் கூறுகள் கண்டெடுக்கப்பட்டன.
கிராமியோபோன் ஆலோசனை
கிராமியோபோன் ஆலோசனை தவறான யூகத்தில் இருந்து விலகிச் சென்றது. காரணம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போது அவர் மண்ணின் ஆரோக்கியத்தை பற்றிய துல்லியமான உணர்வையும், மகசூலையும் அதிகரிக்க தேவையான உரத்தின் அளவையும் தெரிந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வருடாந்திர பூண்டு உற்பத்தியை 80 குவாண்டாலில் இருந்து 108 குவாண்டால் ஆக அதிகரித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நான் பூச்சிக்கொல்லி செலவையும் மிச்சப்படுத்தி இருக்கிறேன் காரணம் உரத்தை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற விகிதம் அறிந்து கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ஷடம் அல்லது சாதகமான வானிலை
ஆஷிஷ் சரியாவைப் போன்றே, இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள்., நல்ல அதிர்ஷடம் அல்லது சாதகமான வானிலை நம்பியிருக்கும் நல்ல அறுவடைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை அணுக முடியும். இதற்கு அதிக செலவு தேவையில்லை, உதாரணமாக கிராமியபோனின் பண்ணை மேலாண்மை சேவைகள் பயிர் பருவத்திற்கு ரூ.1,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான வேளாண் துறை ஆலோசகர்கள்
நீண்ட காலமான மாவட்ட அளவிலான வேளாண் துறை ஆலோசகர்களின் களம், பயிர் ஆலோசனை இந்தியாவில் பல பகுதிகளில் ஏற்க தொடங்கப்பட்டுள்ளது. இந்த அக்ரிடெக் அப்ஸ்டார்ட்ஸ் பெரும்பாலும் சிறந்த தொழில்நுட்பத்திற்கான அணுகலை கொண்டுள்ளது. சரியான நேரத்தில் நம்பகமான தகவல்களை வழங்குகிறது. சியோன் சந்தை ஆராய்ச்சியின்படி, உலகளாவிய ஸ்மார்ட் வேளாண் சந்தை 2016-ல் சுமார் 5.09 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 15.3 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 13% அதிகரிப்பாகும்.
தொழில்நுட்பத்தின் மிகவும் முக்கிய பங்குகள்
இந்தியா வேளாண்மையில் தொழில்நுட்பத்தின் மிகவும் முக்கிய பங்குகள் குறித்து பார்க்கையில், பயிர் மற்றும் மண் கண்காணிப்பு ஆகும். அதாவது சென்சார்கள் மற்றும் இணையம் அல்லது ஐஓடி, பயிர் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை கண்காணிக்க தொழில்நுடபங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் பகுப்பாய்வு ஆனது செயற்கை நுண்ணறிவு, ஏஐ மற்றும் இயந்திர கற்றல் கருவிகள், விதைகளை விதைப்பதற்கு உகந்த நேரத்தை கணிக்கவும் பூச்சி தாக்குதல் குறித்து எச்சரிக்கவும் இது பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக