Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ரூ.8,999 மட்டுமே., ரியல்மி சி21ஒய் இன்று விற்பனை: 5% சார்ஜ் போதும் 2 நாள் போன் யூஸ் பண்ணலாம்!

பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

ரியல்மி சி21 ஒய் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. யுனிசாக் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 20:9 விகித வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சதுர வடிவத்தில் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்

பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் இருக்கிறது. இதில் பிரத்யேக சூப்பர் பவர் சேமிப்பு பயன்முறை இருக்கிறது. இதை ஆக்டிவேட் செய்யும் போது ஐந்து சதவீத பேட்டரியுடன் 2.33 நாட்கள் நீட்டிப்பு ஆதரவை வழங்குகிறது. .

ரியல்மி சி21 ஒய் விலை

ரியல்மி சி21 ஒய் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ரியல்மி சி21 ஒய் சாதனத்தின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.8,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.9,999 எனவும் இருக்கிறது. இது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைக்காரர்களிடம் இது விற்பனைக்கு கிடைக்கிறது.

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் சலுகைகள்

ரியல்மி சி21 ஒய் சாதனமானது கிராஸ் ப்ளாக் மற்றும் க்ராஸ் ப்ளூ ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு மாடலுக்கான ப்ரீபெய்ட் ஆர்டர்களுக்கு ரூ.500 தள்ளுபடி, பிளிப்கார்ட் பல்வேறு வங்கி கார்ட்களுக்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் பல கேஷ்பேக்குகள் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரியல்மி.காம்-ல் மொபிவிக் மூலம் வாங்கும் போது ரூ.200 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி சி21 ஒய் சிறப்பம்சங்கள்

ரியல்மி சி21 ஒய் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 720x1,600 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 20: 9 விகிதத்lை கொண்டிருக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி

இந்த ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் அம்சத்தோடு இது வருகிறது. ரியல்மி சி21 ஒய் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

ரியல்மி சி21 ஒய் கேமரா அம்சங்கள்

ரியல்மி சி21 ஒய் சாதனத்தை பொறுத்தவரை இதில் மூன்று பின்புற கேமரா அம்சம் இருக்கிறது. இதில் 13 மெகாபக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மோனக்ரோம் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ வசதிக்கென முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரியல்மி சி21 ஒய் சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. ரியல்மி சி21 ஒய் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய ஆதரவுகள் இருக்கிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக