
புதிய தொழில்நுட்பங்களுக்கும், தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சிவகங்கை அருகே இருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கிராம மக்களை பிரதமர் மோடி அவர்கள் பாராட்டியுள்ளார்.
அதாவது வானொலியில் மனதின் குரல் என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது சிவகங்கைஅருகே இருக்கும் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து, மின் தேவையை தாங்களேபூர்த்தி செய்து கொள்வதை பாராட்டியுள்ளார்.
வெளிவந்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதற்குவேண்டி காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி ஆகிய பகுதிகளில் தினமும் காய்கறி, மீன், கோழி ஆகிய உணவுக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதன்பின்பு அவற்றை நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகிறது. பின்பு அதன் மூலம் ஜெனரேட்டரை இயக்கி சுமார் 220 வாட் மின்சாரம் தயாரிக்கின்றனர்.
மேலும் அதில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை 20 தெரு விளக்குகள், மின்சாரக் குப்பை வாகனங்களில் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர். இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் அந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு மின்கட்டணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உணவுக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்வதாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் காஞ்சிரங்கால் கிராமத்தினருக்கு பிரதமர் மோடி பாரட்டியிருப்பது சிவகங்கை மக்களை சந்தோஷப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு உலகம் முழுவம் நல்ல வரவேற்பு இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக