
ஐபோன் 12 அல்லது ஐபோன் 12 ப்ரோ மாடல்கள் பயன்படுத்தும் பயனர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இது அரிய வாய்ப்பாகும். காரணம் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளும் போது குரல்களை கேட்பதில் சிக்கல் இருந்தால் அதை சரிசெய்ய இது சரியான நேரமாகும். ஆப்பிள் ஒரு புதிய திட்டத்தின் கீழ் சிக்கலை சரி செய்ய அனுமதிக்கிறது.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ சாதனங்களின் மிகச் சிறிய சதவீத சாதனங்கள் ரிசீவர் தொகுதியில் சிக்கலை சந்திக்கக்கூடும் என ஆப்பிள் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன்12 ப்ரோ சாதனங்களில் ஆடியோ பிரச்சனைகளை சந்திக்கும் பயனர்களுக்கு ஆப்பிள் ஒரு புதிய சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ பயன்படுத்தும் சிறிய சதவீத பயனர்கள் ஆடியோ சிக்கலை சந்திக்கநேரும் என ஆப்பிள் கருத்து தெரிவித்துள்ளது. அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஆடியோ சிக்கல்களை சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சிக்கலை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு
இதுகுறித்து பல பயனர்கள் முன்னதாகவே ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ இதேபோன்ற சிக்கல்களை சந்திப்பதாகவும் புகாரளித்தனர். இதையடுத்து அக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021-ல் தயாரிக்கப்பட்ட இந்த ஐபோன் சாதனங்கள் இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது என ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய சேவைத் திட்டம் தங்கள் சாதனத்தில் சேதமடைந்த ஸ்பீக்கர்களை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.
ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள்
பயனங்கள் தங்கள் ஆப்பிள் சாதனத்தில் இதுபோன்ற குறைகள் இருந்தால் அனைத்து ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் அனைத்திலும் இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய சேவை திட்டத்தில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மட்டுமே அடங்கும். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த திட்டத்தின் கீழ் சரிசெய்ய இயலாது.
ஆப்பிள் ரிப்பேர் சென்டர் மூலம் மெயில்-இன் சேவை
தங்களது ஸ்மார்ட்போனின் இயர்பீஸை சரிபார்க்க முதலில் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட கடையை கண்டுபிடித்து, நேரில் செல்லவும். ஆப்பிள் ரிப்பேர் சென்டர் மூலம் மெயில்-இன் சேவையை உள்ளமைக்க ஆப்பிள் சப்போர்ட்டையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
பயனர் சிக்கலை கண்டறிய வேண்டும்
ஆப்பிள் 12 மற்றும் ஆப்பிள் 12 ப்ரோ சாதனத்தில் திரை கோளாறு போன்ற பழுதுபார்ப்பில் ஏதேனும் சேதம் இருந்தால் இந்த சேவை திட்டத்தில் தொலைபேசியை சமர்பிக்கும் முன் பயனர் சிக்கலை கண்டறிய வேண்டும் என ஆப்பிள் சப்போர்ட் பக்கம் தெரிவிக்கிறது. கூடுதல் பழுதுபார்ப்புக்கு கூடுதல் செலவாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மிகச் சிறிய சதவீத ஐபோன்கள் ஒலி தொடர்பான சிக்கலை சந்திக்க நேரிடும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது.
இலவசமாக பழுதுபார்த்துக் கொடுப்பார்கள்
தங்களது ஐபோனில் இந்த சிக்கல் இருந்தால் ஆப்பிள் அல்லது ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குனர் இதை இலவசமாக பழுதுபார்த்துக் கொடுப்பார்கள். அதற்கு முன்னதாக நீங்கள் கொடுக்கும் சாதனம் மற்றும் அதன் கோளாறுகள் இந்த ரீப்பேர் சேவைத் திட்டத்துக்கு தகுதியுள்ளதா என்பதையும் சோதனை செய்வார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக