Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

ஐயா., ராசா 10 லட்சத்தை க்ளோஸ் பண்ணிட்டியேப்பா- பப்ஜி-ல் ரூ.10 லட்சம் செலவிட்டு வீட்டைவிட்டு ஓடிய சிறுவன்!

காவல்நிலையத்தில் புகார்

பப்ஜி விளையாடுவதற்காக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் தனது தாய் வங்கி கணக்கில் இருந்து 16 வயது சிறுவன் ரூ.10 லட்சம் செலவழித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். பெற்றோர்கள் கண்டித்ததன் காரணமாக மேற்கு புறநகர் ஜோகேஸ்வரியில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் புகார்

சிறுவன் காணாமல் போனது குறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுவன் மைனர் என்பதால் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த விசாரணையில் அந்த சிறுவனின் பெற்றோர், அவர் கடந்த சில நாட்களாகவே பப்ஜி-க்கு அடிமையாகி இருந்தார் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பப்ஜி விளையாட்டின்போது அவர் தனது தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் செலவழித்து ஐடி மற்றும் மெய்நிகர் நாணயம் பெற்று விளையாடியதாக குறிப்பிட்டார்.

சிறுவனை கண்டுபிடித்த போலீஸார்

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு விளையாடி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலவழித்தது குறித்து தங்களுக்கு தெரிந்ததும் அந்த சிறுவனை தாங்கள் கண்டித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து அவர் ஒரு கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டனர். தகவலறிந்ததும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் உதவியோடு சிறுவனை போலீஸார் கண்டுபிடித்தனர். கவுன்சிலிங் அளித்த பிறகு அந்த பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

பப்ஜி மொபைல் விளையாட்டு இந்தியாவில் தடை

பப்ஜி மொபைல் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த கேமிற்காக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை க்ராப்டன் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா பூர்த்தி செய்யும் வகையில் பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா வெளியிடப்பட்டது. இதேமாதிரியான ஃப்ரீ பயர் என்ற விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து இருக்கிறது. வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வை நாம் பார்த்திருப்போம் அதற்கு காரணம் இந்த விளையாட்டுகள் தான். இதில் நேரத்தை செலவிட்டு வந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக