
விவோ
நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலை அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகம்
செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களின்
டேப்லெட் மாடல்களை விட தனித்துவமான அம்சங்களுடன் விவோ நிறுவனத்தின்
டேப்லெட் மாடல்
வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவோ நிறுவனத்தின் துணை நர்வாக தலைவரான ஹு பைஷான் அண்மையில் விவோ டேப்லெட் விற்பனைக்கு வரவுள்ளதாக உறுதி செய்தார். ஆனால் இதுகுறித்த கூடுதலான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் விவோ பேட் என்ற பெயரில் புதிய டேப்லெட் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான iQOO நிறுவனமும் புதிய டேப்லெட் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக விவோ டேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விவோ டேப்லெட் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக