Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 14 ஆகஸ்ட், 2021

மாலை நேரத்தில் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்லன்னா பணப் பிரச்சனையை சந்திப்பீங்க...

Donating These Things In The Evening Brings Poverty In The House 
தானம் வழங்குவது மிகவும் நல்ல செயல். அதுவும் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது மிகவும் முக்கியம். ஆனால் அப்படி தானம் செய்வதாக இருந்தால், அதை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சூரியன் மறைந்த பின்னர் சில பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், அனைத்து முக்கிய பண்டிகைகள் மற்றும் விஷேச நாட்களில் தானம் அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தான தர்மமின்றி கடவுளை மட்டும் வணங்குவதால் எவ்வித பலனும் கிடைக்காது. தானம் செய்வதாக இருந்தால், அதை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்வது தீமையைத் தருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பின்வரும் பொருட்களை தானம் செய்வது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும்.
  

உடை, காலணிகள்

பல பெண்களுக்கு வெளியே செல்லும் போது தெரிந்தவர்களிடம் விருப்பமான அணிகலன்களை வாங்கி அணியும் பழக்கம் இருக்கும். ஜோதிடத்தின் படி, எப்போதும் ஒருவர் மற்றவர்களின் உடைகளை, காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கி அணியக்கூடாது. இதன் காரணமாக, அந்த நபரின் எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களின் பொருளை வாங்கிப் பயன்படுத்தினாலும், வாங்கிய பொருட்களை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம்.

கைக்கடிகாரம்

மாலையில் கைக்கடிகாரத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களிடம் வாங்கினாலும், அதை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம். இல்லாவிட்டால், நீங்கள் சிக்கலில் மாட்டி கஷ்டப்படுவீர்கள்.

கடன் கொடுக்காதீர்

சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள். மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரமாக கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் வீட்டில் வறுமை அதிகரிக்கலாம்.


புளிப்பான பொருட்களைக் கொடுக்காதீர்

மாலையில் எக்காரணம் கொண்டும் புளிப்பான பொருட்களான தயிர், ஊறுகாய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். இதன் காரணமாக, உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனால் உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை அதிகரிக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் ஒரு மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. அதோடு மஞ்சள் லட்சுமி தேவி குடியிருக்கும் பொருளாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சளை மாலை வேளையில் மற்றவருக்கு கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

உப்பு

மாலை வேளையில் எப்போதும் யாருக்கும் உப்பை கொடுக்காதீர்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக