
அண்மையில் வெளிவந்த தகவலின்படி ஐபோன் 13 சாதனம் A15 பயோனிக் சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம். மேலும் இந்த ஐபோன் 13 சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஐபோன் 13 மாடல்களில் பயனர்கள் எதிர்பார்க்கும் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பின்பு ஐபோன் 13 மாடல்களில் கேமிங் மற்றும் சிறந்த செயல்திறன் போன்றவைகளுக்கு தகுந்தபடி பெரிய பேட்டரி வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஐபோன் 13 சீரிஸ் mmWave 5G ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 13 சீரிஸ் சாதனங்கள் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரிய பேட்டரிகளுடன், பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவும் உள்ளதால் இந்த சாதங்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் சிறப்பான அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராக்களுடன் மிரட்டலான வடிவமைப்புடன்,புதிய வண்ணங்களுடனும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒவ்வொரு முறையும் ஆப்பிள் நிறுவனம் ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அதன் புதிய சாதனத்துடன் அறிமுகம் செய்யும், அதன்படி இந்த ஆண்டு ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் புதிய தொழில்நுட்பத்தை நாம் எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக ஐபோன் 13 தொடரின் கீழ் 4 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அந்த 4 மாடல்களின் பெயர்களைபொறுத்தவரை, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் பெறும் முதல் மாடல் ஐபோன் 13 என்றும், இது கடிகாரம், பேட்டரி மற்றும் இதர நோட்டிபிகேஷன்களை காண்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஐபோன் 13 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக