
சியோமி நிறுவனம் தனது புதிய மி நோட்புக் லேப்டாப் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த புதிய மி நோட்புக் லேப்டாப் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் தனது மி நோட்புக் 14 மற்றும் மி நோட்புக் 14 ஹாரிசான் எடிஷன் சாதனங்களை அறிமுகம் செய்தது. ஆனால் இதுவரை பேக்லிட் கீபோர்டு கொண்ட லேப்டாப் மாடல்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.
இந்நிலையில் சியோமி வெளியிட்ட தகவலின்படி புதிய மி நோட்புக் டீசர் ஆனது பேக்லிட் கீபோர்டு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதவிர அந்த புதிய லேப்டாப் மாடலின் விவரங்கள் வெளிவரவில்லை. மேலும் அண்மையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி அறிமுகம் செய்த இரண்டு லேப்டாப் மாடல்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மிபுக் ப்ரோ, ரெட்மிபுக் e-learning edition மாடல்களை தான் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. பின்பு இந்த இரண்டு ரெட்மி லேப்டாப் மாடல்களும் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளம், எம்எஸ் ஆபிஸ் 2019 மற்றும் எம்ஐ ஷேர் போன்ற விருப்பங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மிபுக் ப்ரோ
ரெட்மிபுக்
ப்ரோ மாடல் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 720 பிக்சல் கொண்ட எச்டி வெப்கேம் ஆதரவுடன்
வெளிவந்துள்ளது.ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல் இன்டெல்லின் 11-வது ஜென்
கோர் ஐ 5 டைகர் லேக் ப்ராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே
இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. அதேபோல் 1.8 கிலோ எடை மற்றும் 19.9 மிமீ தடிமன் கொண்டது இந்த அசத்தலான ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப். டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0, இரண்டு யுஎஸ்பி 3.2 டைப்-சிபோர்ட், யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மிபுக் ப்ரோ லேப்டாப் மாடல். இதுதவிர எஸ்டி கார்டு ரீடர், இரண்டு 2W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.
ரெட்மிபுக் e-learning edition
ரெட்மிபுக்
இ-லேர்னிங் எடிஷன் ஆனது இன்டெல்லின் 11-வது ஜென் கோர் ஐ 3 டைகர் லேக்
ப்ராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 256ஜிபி மற்றும்
512ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது. மேலும் ரெட்மிபுக்
e-learning edition மாடலின் மற்ற அம்சங்கள் ரெட்மிபுக் ப்ரோ போலவே உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மிபுக் ப்ரோ மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. அதேபோல் 256ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் கொண்ட ரெட்மிபுக் e-learning edition விலை ரூ.41,999-ஆக உள்ளது. 512ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் கொண்ட ரெட்மிபுக் e-learning editionவிலை ரூ.44,999-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக