பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரிபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் இந்நிறுவனம் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.18 திட்டத்தில் சிறந்த சலுகையை வழங்கியது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 48 மணி வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற வீடியோ அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் ஒரு திட்டம் வைத்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின ரூ.19 திட்டம் ஆனது 48 மணி நேரம் வேலிடிட்டி-ஐ வழங்குகிற. பின்பு இந்த திட்டத்தில் 200எம்பி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்ப நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த மூன்று வவுச்சர்கள் பற்ற விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்
பிஎஸ்என்எல்
ரூ.201 திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும்
காலத்திற்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 300 நிமிட அழைப்பு
வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் முழு
செல்லுபடியாகும் காலத்திற்கு 6 ஜிபி டேட்டா
மற்றும் 99 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. அழைப்பு மற்றும் தரவை சிக்கனமாக பயன்படுத்தும் நபர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம் டெல்லி மற்றும் மும்பை உட்பட அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். இது 80 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். மாதாந்திர திட்டம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்குஇது சிறந்த திட்டமாகும்.
பிஎஸ்என்எல் புதிய திட்டம் ரூ.1,199
பிஎஸ்என்எல் புதிய திட்டம் ரூ.1,199 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இது வரம்பற்ற குரலழைப்பு நன்மைகளை வழங்குகிறது. முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் 24 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் கவர்ச்சிகரமான சலுகை என்னவென்றால் இது ஒரு ஆண்டு முழுவதும்செல்லுபடியாகும். அதிக தரவு பயன்படுத்தாமல் அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த திட்டம் சாதாரன மொபைல் பயனர்களுக்கு சிறந்த தேர்வாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக