
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை பின் தொடர்ந்து, இந்த திட்டம் எப்படிச் செயல்படும், யாருக்கெல்லாம் இந்த திட்டம் கிடைக்கும் என்பது பற்றிய புரிதலை விளக்கம் அளித்துள்ளார்.
இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்
பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பற்றி திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததில் இருந்து, ஒரு பெரிய குழப்பம் நீண்ட நாட்களாக மக்களிடம் பரவி வருகிறது. இந்த திட்டம் குடும்பத் தலைவராக ஒரு பெண் இருந்தால் மட்டுமே, இந்த பெண்களுக்கான தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பொய்யான வதந்தி பரவியதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் இந்த குழப்பம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தலைவராக பெண்களின் பெயரை மாற்றும் முயற்சி
இதையடுத்து திமுக அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயேயே ஏராளமான பெண்கள் தங்களின் பெயரை குடும்பத் தலைவராக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வழியாகப் பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டும் கடந்த சில மாதங்களில் பல லட்சத்தைத் தாண்டியது. இந்த குழப்பத்தில் இருந்து மக்களை விடுவிக்கத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் இந்த உதவி தொகை கிடைக்கும்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் மூலம் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் யாரும் அவர்களின் அட்டையில் உள்ள குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான பொய்யான தகவலால் மக்கள் குழப்பம்
சமீபத்தில் வெளியான போலி தகவலில், குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் இந்த ரூ. 1000 உதவித் தொகை கிடைக்கும் என்று சிலர் தவறான தகவலை மக்களிடம் சென்று சேர்த்துவிட்டனர். ஆனால், இந்த திட்டம் அப்படிச் செயல்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். பொய்யான தகவலை நம்பி ஏராளமான மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயன்று வருகின்றனர்.
குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் தேவையற்ற வேலை - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இது தேவையற்ற வேலை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கியுள்ளார். இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கியம் நோக்கம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். எனவே, இல்லத்தரசிகளுக்கு இந்த நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். அதுபோல், குடும்பத் தலைவரின் பெயரை யாரும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அரசு அலுவலகங்கள் வழியாகவோ மாற்றம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தகுதியான குடும்பங்களைக் கண்டறிந்து ரூ.1,000 வழங்கப்படும்
அதேபோல், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களைக் கண்டறிந்து அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அறிவிக்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளுடன் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு என்பது இனி 12 மாதமாக அதிகரிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக