Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 14 ஆகஸ்ட், 2021

உள்ளே வரோம்., ஒதுங்கி நில்லு- ரூ.1399 மட்டுமே: இந்தியாவில் பிலிப்ஸ் அறிமுகம் செய்த 3 புதிய செல்போன்!

பவர் பேங்க்ஸ், சார்ஜர்கள், கேபிள்கள்ப்ளூடூத் மற்றும் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களுடன் மூன்று புதிய பிலிப்ஸ் இ-சீரிஸ் செல்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனின் விலை ரூ.1399 முதல் தொடங்குகிறது. டிபிவி மூன்று புதிய செல்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

பிலிப்ஸ் இ-தொடர் அம்ச தொலைபேசி

டிபிவி தொழில்நுட்பம் இன்று இந்திய சந்தையில் பிலிப்ஸ் இ-தொடர் அம்ச தொலைபேசியுடன் மொபைல் பிரிவில் நுழைவதை அறிவித்துள்ளது. டிபிவி-யின் கீழ் பிலிப்ஸ் மொபைல் போன்கள் உலகம் முழுவதும் பல நாடுகளின் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரம்பு ரூ.1399 முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் தொடர் குறித்து பார்க்கையில், இது ஸீனியம் இ209, பிலிப்ஸ் ஸீனியம் இ 125 மற்றும் பிலிப்ஸ் இ 102ஏ அம்ச செல்போன்களாகும். சாதனத்தின் விலை குறித்து பார்க்கையில், Xenium E209 விலை ரூ.2,999 எனவும் Xenium E125 விலை ரூ.2099 எனவும் மற்றும் Philips E102A விலை ரூ.1399 எனவும் இருக்கிறது.

நீண்ட பேட்டரி ஆயுள்

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் கிடைக்கும். இந்த சாதனங்களானது நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் சக்தி வாய்ந்த ஒலி வெளியீட்டுடன் வருகிறது. இதில் முதன்மை மாடலான பிலிப்ஸ் ஸீனியம் இ209 வயது பெரியர்கள் பயன்படுத்த சிறந்த சாதனமாகும். காரணம் அவர்களுக்கான கூடுதல் சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது மேலும் அவர்கள் பயன்படுத்த எளிதான பயன்பாடுகளை கொண்டிருக்கிறது. இது அதிக பேச்சாளர் நேரம், எஸ்ஓஎஸ் செயல்பாடு, கீபோர்ட் மற்றும் சிறந்த பிரகாசம் செயல்பாட்டுடன் வருகிறது.

பவர் பேங்க்ஸ், சார்ஜர்கள், கேபிள்கள்

மேக் இன் இந்தியா அடிப்படையில் டிபிவி அதன் உற்பத்தி கூட்டாளராக பேட்ஜெட்டுன் தொடர்பு கொண்டுள்ளது. இது 200-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை கொண்ட பீட்டலுடன் அதன் தேசிய விநியோகஸ்தராக இருக்கிறது. அதுமட்டுமின்றி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் பவர் பேங்க்ஸ், சார்ஜர்கள், கேபிள்கள் போன்ற பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மொபைல் பாகங்கள் வகைகளை வலுப்படுத்தவும் பிராண்ட் திட்டமிட்டுள்ளது.

பிலிப்ஸ் ஸீனியம் இ 209 விவரக்குறிப்புகள்

பிலிப்ஸ் Xenium E209 சாதனம் 2.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த செல்போன் 108டிபி சக்தி வாய்ந்த ஸ்பீக்கர், எஸ்ஓஎஸ் செயல்பாடு, பிரகாசமான டார்ச் மற்றும் லாக் அன்லாக் பயன்பாடு இருக்கிறது. சிறந்த கீபோர்ட் ஆதரவுடன் 1000 எம்ஏஎச் பேட்டரியும் இதில் இருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் பலநாட்கள் பயன்படுத்தலாம். சாதனத்தில் உள்மைக்கப்பட்ட வயர்லெஸ் எஃப்எம் உள்ளது. இது ப்ளூடூத் 3.0 மூலம் இயக்கப்படுகிறது.

பிலிப்ஸ் ஸீனியம் இ125 விவரக்குறிப்புகள்

பிலிப்ஸ் ஸீனியம் இ125 ஸ்மார்ட்போனில் 2000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது நீடிக்கப்பட்ட பேச்சு நேரம் கொண்டுள்ளது. 1500 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்டாண்ட்-பை முறையில் வழங்குகிறது. இது எம்டி6261எம் எஸ்ஓசி உடனான 1.77 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மெமரி விரிவாக்க வசதி, க்யூவிஜிஏ கேமராவுக்கான ஆதரவுடன் இது வருகிறது. இந்த சாதனம் உள்ளமைக்கப்பட்ட ப்ளூடூத் 3.0 மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஸ்ட்ரீமிங் இசை, இரட்டை சிம் ஆதரவுடன் இது வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் முன்பே நிறுவப்பட்ட விளையாட்டு மற்றும் உள்ளமைக்கப்பட்ட மியூசிக் ப்ளேயருடன் வருகிறது.

பிலிப்ஸ் E102A விவரக்குறிப்புகள்

பிலிப்ஸ் இ102ஏ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது 1.77 இன்ச் 128 x 160 பிக்சல்கள் டிஎஃப்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நீண்ட நேர பேட்டரி இணைந்திருக்க லி அயன் 1000 எம்ஏஎச் பேட்டரி இதில் இருக்கிறது. உள்ளமைக்கப்பட்ட விஜிஏ கேமரா மற்றும் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் பயனர்களின் புகைப்படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. மியூசிக் ப்ளேயர், வயர்லெஸ் எஃப்எம், சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேம் ஆதரவுகள் இதில் இருக்கிறது.

இந்த சாதனம் ப்ளூடூத் 2.1 தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதில் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆதரவு, இரட்டை சிம் ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக