Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 14 ஆகஸ்ட், 2021

கழுத்தை நெரித்து மனைவி கொலை; மிலிட்டரியின் பி.பி நாடகம் அம்பலம்!

தேனி மாவட்டத்தில் மனைவியை கொலைசெய்து விட்டு பிரஷரால் இறந்ததாக நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் நடராஜன் (57). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி ( 54). இவர்களது 4 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் நடராஜனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அத்திரம் அடைந்த நடராஜன் தனது மனைவி சாந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் ஆட்டோ மூலம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு சென்று, தன் மனைவிக்கு பிரஷர் உள்ள என்றும், அதன் காரணமாக மயங்கி விழுந்து விட்டார் எனவும் அங்கிருந்த மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாந்தி இறந்து விட்டதாக கூறினர். மேலும் அவர் கழுத்தில் காயம் இருந்ததால், இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த சின்னமனுார் காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது மனைவி சாந்தியை கழுத்து நெரித்து கொலை செய்ததை நடராஜன் ஒப்புக்கொண்டார். எனவே அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக