Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 ஆகஸ்ட், 2021

ஜியோ டிப்ஸ்: ஸ்மார்ட்போன் கேமரா மூலம் டிவியில் வீடியோ அழைப்பு மேற்கொள்வது எப்படி?

டிவியின் பெரிய திரையில் அழைப்பு மேற்கொள்ள அசையா?

ஜியோ ஃபைபர் பயனர்கள் இப்போது தனியாக ஸ்மார்ட் டிவி கேமரா எதுவும் இல்லாமல் தங்கள் டிவியில் இருந்து வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. JioFiberVoice இப்போது பயனர்களுக்குத் தடையற்ற HD வீடியோ அழைப்புகள், கான்பிரன்ஸ் அழைப்புகள் போன்றவற்றை இனி அவர்களின் பெரிய தொலைக்காட்சித் திரையில் தனிப்பட்ட அனுபவமாகப் பயனர்கள் பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.

டிவியின் பெரிய திரையில் அழைப்பு மேற்கொள்ள அசையா?

டிவியின் பெரிய திரையில் அழைப்புகளைச் செய்ய பயனர்களுக்கு எக்ஸ்டர்னல் கேமரா அல்லது வெப் கேமரா கூட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "CAMERA ON MOBILE" என்ற புதிய அம்சத்துடன் பயனர்கள் இனி தொலைக்காட்சி அழைப்பை மேற்கொண்டு அனுபவிக்கலாம். இந்த அம்சம் உங்கள் சொந்த மொபைல் கேமராவை JioJoin app மூலம் பெரிய திரை வீடியோ அழைப்புகளைச் செய்வதற்கான வெப் கேமராவாக பயன்படுத்த உதவுகிறது.

JioJoin app இருந்தால் போதும்.. ஸ்மார்ட்போன் கேமரா மூலம் டிவியில் வீடியோ அழைப்பு மேற்கோளள்லாம்

ஜியோ ஃபைபர் பயனர்கள் மொபைல் அம்சத்தில் கேமராவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த அம்சம் புதிய ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது. இதை செயல்படுத்த பயனர்கள் "JioJoin app" செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். JioJoin பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, 10 இலக்க ஜியோஃபைபர் எண்ணை (லேண்ட்லைன் எண்) உள்ளமைக்கவும். இதை முடித்துவிட்டீர்கள் என்றால் பெரிய டிவி திரையில் அழைப்பை மேற்கொள்ள தயாராகிவிட்டிர்கள்.

JioFiberVoice பயனர்களுக்குச் சிறப்பு அம்சங்கள்

வழக்கமான லேண்ட்லைன் அனுபவத்துடன் ஒப்பிடும்போது தனித்துவமான வித்தியாசமான லேண்ட்லைன் அழைப்பு அனுபவத்தை ஜியோஃபைபர் வாய்ஸ் வழங்குகிறது. JioFiberVoice பயனர்களுக்குச் சிறப்புப் புதுமையான அம்சங்களை வழங்குகிறது. லேண்ட்லைன் எண்ணை 6 சாதனங்களில் கட்டமைக்கவும். உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் உட்பட அனைத்திற்கும் இது பொருந்தும்.

ஜியோ பயனர்களுக்கு இப்போது கிடைக்கும் புதிய அம்சங்கள்

மொபைல் எண்ணில் இணையான ரிங்கிங்: உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் இணையான ரிங்கிங்கை உள்ளமைப்பதன் மூலம் நீங்கள் வீட்டில் இல்லாதபோது உங்கள் லேண்ட்லைன் எண்ணில் வரும் அனைத்து அழைப்புகளையும் தவறவிடாமல் நீங்கள் அனுபவிக்க முடியும்.

ISD அழைப்புகள்: JioFiberVoice இல் ISD ஐப் பயனர்கள் இப்போது பெறுகிறார்கள். உலகம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ISD அழைப்புகளைச் செய்யலாம்.

get contacts அம்சம் பற்றி தெரியுமா?

இம்போர்ட் போன் காண்டாக்ட் புக்: உங்கள் டிவியில் இருந்து நீங்கள் அழைக்க விரும்பும் தொடர்புகளை ஒரே கிளிக்கில் பெற "get contacts" பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்.

குரல் கட்டளையைப் பயன்படுத்தி அழைப்பு: எஸ்டிபி ரிமோட்டில் குரல் கட்டளையைப் பயன்படுத்தி, சிரமமின்றி அழைப்புகளைச் செய்யலாம்.

எக்ஸ்டர்னல் HD கேமரா தேவையில்லை

பயனர்கள் பெரிய திரைகளில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள இது ஒரு சிறந்த அம்சமாகும். அதற்காக அவர்கள் தனியாக எக்ஸ்டர்னல் HD கேமராவை வாங்க வேண்டியதில்லை. குறிப்பாகத் தொற்றுநோய் காலத்தில், இது பயனர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் அம்சமாக இருக்கும் என்று ஜியோ நம்புகிறது. இந்த அம்சத்தை உங்கள் டிவியில் ட்ரை செய்து எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக