புதன், 4 ஆகஸ்ட், 2021

டெலிகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சங்கள் அறிமுகம்.!

 டெலிகிராம் தெரிவித்த தகவலின்ப

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக டெலிகிராம் நிறுவனம் புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் உள்ள அம்சங்களை விட பல்வேறு புதிய அம்சங்கள் இப்போது டெலிகிராம் செயலியில் கிடைக்கிறது.

இந்நிலையில் டெலிகிராம் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆயிரம் யூசர்கள் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் பங்கேற்க முடியும். பின்பு 30 பேர் வரை தங்களது செல்போன் கேமராவில் இருந்து பிராட்காஸ்ட் செய்யும் வசதியை கொடுத்துள்ளது டெலிகிராம் செயலி. குறிப்பாக இந்த வசதிகள் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் டெலிகிராம் தெரிவித்த தகவலின்படி, வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும், ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கும் சிரமங்களை குறைக்கும் விதமாக இந்த அப்டேட்டை வெளயிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெலிகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இதுதவிர வீடியோக்களை 0.5 செகண்ட் முதல் 2X வரை பாஸ்ட் ஃபார்வேர்டு செய்யும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம் நிறுவனம். பின்பு நீங்கள் படங்களை பார்த்து கொண்டிருந்தால், அதனை நண்பர்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதியையும் கொடுத்துள்ளது டெலிகிராம். அதேபோல் சவுண்டையும் ஷேர் செய்யும் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் நியூ வெர்சன்டெலிகிராமில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் டெலிகிராம் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

அதேபோல் ஷேர்ஷாட்டில் இருக்கும் ஒரு வசதியையும் கொண்டுவந்துள்ளது டெலிகிராம். அதாவது கேலரியில் வீடியோவை ஸ்டோர் செய்யாமலேயே, நேரடியாக வீடியோவை பதிவு செய்து டெலிகிராமில் பகிரும் புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

மேலும் டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் ஆட்டோமேடிக்காக டெலிட் செய்யும் வசதியையும் பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்கள் சுமார் ஒரு மாதம் வரை டைமர் செட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. தற்போது ஐபோனுக்கான வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வியூ ஒன்ஸ் அம்சம் அணுக கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஐபோன்வாடிக்கையாளர்கள் இப்போது ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் நிறுவனங்கள் பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்