Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

கிளிக்கு ஜெயிலா?! இது யோசிக்க வேண்டிய விஷயம்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-----------------------------------------
கிளிக்கு ஜெயிலா?!
 ------------------------------------------
ஒருத்தன் வேகமா பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான். கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துருச்சு! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூண்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் அய்யய்யோ நாம மோதினதுல பையன் ளிழவ ழரவ போல! நம்மள பிடிச்சு ஜெயில்ல போட்டுட்டாங்க அப்புடின்னு !!😅😅
------------------------------------------
சில மொக்கைகள் !!
------------------------------------------
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்..

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.. ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?? யோசிக்கணும்🤔🤔
------------------------------------------
இது யோசிக்க வேண்டிய விஷயம் !!
------------------------------------------
டீ-ல ஒரு சின்ன பல்லி செத்து கிடந்தா பாய்சன்!
ஆனா, பிரியாணில ஒரு கோழியே செத்து கிடக்குதே!
யோசிங்க.....🤔🤔

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்.. ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் - இதுதான் வாழ்க்கை.

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோண்டா, ஹீரோயின் ஹோண்டா ஆயிடாது..!!
------------------------------------------
இது உண்மை அல்லவா?
------------------------------------------
தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது..
ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது.

ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு..
100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம்.

1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு..
3 மணி நேரம் சினிமா விருப்பம்.

பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை..
வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம்.

மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்..
புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை.

பொழுது போக்க முதல் வரிசை..
கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே.

அநாவசியமா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை..
இருபது நிமிட தியானம் கசக்கிறது.

மண்டியிட்டு 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு..
செல்போனை சலிப்பில்லாமல் தேய்ப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக