
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாம்சங் சாதனங்கள் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிரங்கப்பட்டது. குறிப்பாக நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டிள் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 சாதனம் தான் தீப்பற்றி ஏரிந்தது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சாம்சங் கேலக்ஸி ஏ21 சாதனம் தீப்பற்றி ஏரிந்தது குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும் என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சாம்சங் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆனால் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் நாம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்தும் போது, போன் சூடாக இருப்பது தெரிந்தால் சிறுது நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
குறிப்பாகசார்ஜ் போடும்போது செல்போனை உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது,அது மிகவும் ஆபத்து. பின்பு நீங்கள் வாங்கும் போனுக்கு ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அடுத்து ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தவிருங்கள், இது பேட்டரியை சேதம் செய்யும், பின்பு மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் போனை வைக்க பழகிக்கொள்ளுங்கள். போனின் கீபேடு லாக்கை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்த வழி. மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.
மேலும் பேட்டரி பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மற்றும் அந்தந்த நிறுவனத்தின் ஒரிஜினல் பேட்டரிகளை வாங்குங்கள், அது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக