
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தெரிந்தவர்கள் நேரில் வந்தாலும் முகக்கவசம் அணிந்திருப்பதால் அறியாமல் செல்ல வேண்டிய சூழலும் நிலவுகிறது. முகக்கவசம் அணிவது, சானிட்டைஷர் பயன்படுத்துவது, சமூகஇடைவெளி கடைபிடிப்பது குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிந்த குரங்கு
கோயில், மலைப்பகுதி, சில தெருக்கள் என ஆங்காங்கே மனிதர்களோடு ஒன்றி வாழும் குரங்குகளுக்கு கொரோனா குறித்து அறியுமா. அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததை பார்த்த குரங்கு, முகக்கவசம் ஒன்றை எடுத்து அதை முழு முகத்தையும் மூடியபடி நடமாடுகிறது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன ஒரு புராணக்கதை
ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 1.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இது நெட்டிசன்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 22 வினாடி இருக்கும் இந்த கிளிப்பில் முகமூடி அணிய முயற்சிக்கும் இந்த குரங்கு குறித்து பலர் வியப்படைந்தனர். மேலும் இந்த வீடியோவில் என்ன ஒரு புராணக்கதை குரங்கு அதன் முழு முகத்தையும் முகமூடியால் மறைத்து முன்னோக்கி நடக்க முயற்சிக்கிறது என வீடியோ பார்க்கும்போது பின்புற குரலில் கேட்கிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து " அனைவரும் முகமூடி அணிய விரும்புகிறார்கள்" என இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் வைரல்
இந்த வீடியோ இணையதளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிமகமான பின்தொடர்பவர்களை கொண்ட முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் டுவிட்டரில் பகிர்ந்தார். அதன்பின் இது சமூகவலைதளங்களில் பெரும் ஈர்ப்பை பெற்றது. இந்த வீடியோவுக்கு சிலர் வியக்கத்தக்க கருத்துகளை தெரிவித்தாலும் சிலர் "மக்கள் அணிந்த முகக்கவசத்தை இப்படி முறையற்று தூக்கிப்போடுவதால் ஏற்படுவதன் விளைவு இது" என பதிவிட்டுள்ளனர். மேலும் இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது.
குரங்குகளின் சேட்டைகள்
குரங்குகளின் சேட்டைகளில் சில நம்மை வியக்கவைக்கும் விதமாகவே இருக்கும். குரங்கு மட்டுமல்ல பொதுவாக ஒரு சில விலங்கினங்களே நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத செயல்களை செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு நெகிழ வைக்கும் விதமாக இருக்கும். இதேபோல் மலேசியாவின் படு பஹாட் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஜாக்ரிட்ஜ் ரோட்ஜி. 20 வயதான இவர் வழக்கம்போல் மொபைல் போனை படுக்கைக்கு அருகில் வைத்து உறங்கச் சென்றார்.
குரங்கு செல்பி
காலை எழுந்த போது போனை காணவில்லை தேடி பார்த்தப்போடு அருகில் இருந்த பகுதியில் கிடைத்தது. மொபைல் போனை எடுத்து பார்த்தப்போது அதில் குரங்கு கேமராவை ஆன் செய்து செல்பி எடுத்ததோடு மொபைல் போனை கடிக்க முயன்று தூக்கி எரிந்துவிட்டு சென்றுவிட்டது. இந்த புகைப்படமும் வைரலானது.
வியப்படைய வைக்கும் ஆச்சரியங்கள்
ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதில் சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களும் அடங்கும். இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உலகின் மர்மங்களும் விந்தைகளும் இன்னும் ஏராளம் என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக