Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?

முகலாய மன்னர் பாபரின் படையெடுப்பு

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் மிகவும் பிரபலமாக இருப்பது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார். சிறுக சிறுக சந்தாதாரர்களை அதிகரித்த தளம் என்றே கூறலாம். குறிப்பாக பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சீரிஸ்கள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஐபிஎல் உட்பட பல நிகழ்வுகள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அன்-இன்ஸ்டால் ஹாட்ஸ்டார் என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஹாட்ஸ்டார் அன்-இன்ஸ்டால்

அதிலும் குறிப்பாக பயனர்கள் ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஹாட்ஸ்டார் சிக்கலில் சிக்கயதாகவே கருதப்படுகிறது. ஹாட்ஸ்டார் குறித்து பல வகையான கருத்துகளும் டுவிட்டரில் உலா வருகின்றன.

"The Empire" என்ற தொடர்

ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஹாட்ஸ்டாருக்கு பலரும் கருத்துகளை தெரிவிக்க தொடங்கி வருகின்றனர். இதற்கு காரணம் அதில் வெளியான ஒரு சீரிஸ் தான். இந்த தொடரின் பெயர் "The Empire". முகலாய மன்னர் பாபரின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த தொடர்.

முகலாய மன்னர் பாபரின் படையெடுப்பு

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி "தி எம்பயர்" என்ற தொடர் வெளியானது. இந்த தொடர் முகலாய மன்னர் பாபரின் படையெடுப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த தொடர் முகலாய அரசர் பாபரை புகழ் பாடும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார்களும் அளிக்கப்பட்டது இதையடுத்து தி எம்பயர் தொடர் பாபரை புகழவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இது மக்களை திருப்திப்படுத்தும் விதமாக இல்லை என குறிப்பிடப்படுகிறது.

மக்கள் குற்றம் சாட்டு

ஹாட்ஸ்டார் தங்கள் தளத்தின் மீதான புகாரை மறுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து படையெடுப்பாளரான பாபரை தயாரிப்பாளர் புகழ்வதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தங்களது மொபைலில் ஹாட்ஸ்டார் தொடரை அன்-இன்ஸ்டால் செய்து அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் ஓடிடி தளங்கள்

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையையடுத்து தயாரிப்பாளர்கள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். இந்த படங்களை வாங்க நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டன.

அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்

ஸ்மார்ட்போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். குறிப்பாக் சீரிஸ் என்று பார்க்கும் போது நெட்பிளிக்ஸ் சிறந்தது என கூறப்படுகிறது.

பல்வேறு விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கூட சிலர் தங்களுக்கென்று கணக்கில்லாமல் இருக்கலாம், ஆனால், அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT சேவைகளுக்கான தளங்களில் தனக்கென்று ஒரு கணக்கில்லாமல் பெரும்பாலானோர் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் திட்டங்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டு ஓடிடி அணுகலை வழங்குகிறது.

தமிழ் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் பெறுவதற்கு மாத பிளானாக ரூ.300 என்ற விலைப்பிரிவில் முதல் தொடங்குகிறது. இதற்கும் இணைய தேவை பிரதானம்தான். நெட்பிளிக்ஸ் மாத சந்தா விலை ரூ.200 என்ற விலைப்பிரிவின் முதல் ரூ.800 என்ற விலைப்பிரிவு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் வெளியீட்டை பொருத்தவரை பிக்பாஸில் தொடங்கி அனைத்து விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இதில் காணலாம். அதுமட்டுமின்றி பல தமிழ் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களையும் இதில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக