Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

எல்ஐசியின் ஆனந்தா மொபைல் மின்னணு செயலி அறிமுகம்

எல்ஐசியின் ஆனந்தா மொபைல் மின்னணு செயலி அறிமுகம்

சென்னை : "எல்.ஐ.சி (LIC) நிறுவனங்களில் முகவர்களாக செயல்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசி விவரங்களை எளிதில் பதிவு செய்வதற்கு ஏதுவாக "மின்னணு முறையில்" "ஆனந்தா என்ற மொபைல் (Ananda mobile application) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்னணு மொபைல் செயலி குறித்து எல்.ஐ.சி (Life Insurance Corporation) நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது., "ஆத்மா நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை (Customers) பல்வேறு பாலிசிகளில் (Policy) சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் "மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ஆனந்தா செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

"புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் (Aadhar number) அடிப்படையில் உறுதி செய்யவும் காகிதத்தில் "விண்ணப்ப படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களை பெறவும் முகவர்களால் முடியும். இதன் மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.

புதிய செயலியை எல்ஐசி இந்தியா தலைவர் எம்.ஆர்.குமார் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அவர் கூறும்போது "ஆனந்தா இணையதளத்தின் பயன்பாடு அதிகமாக இருந்ததால் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை அணைத்து முகவர்களும் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். "இதை உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப குழுவினருக்கு (Technology team) பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்கள் முகேஷ்குமார் குப்தா, ராஜ்குமார், சித்தார்த்த மொஹந்தி, மினி ஐப் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் முகவர்களுக்கு வீடியோ மூலம் ஆனந்தா செயலியை பயன்படுத்தும் முறை அதில் உள்ள தனிச் சிறப்புகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக