Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 6 செப்டம்பர், 2021

சபாஷ்., ஃப்ரீ., ஃப்ரீ- 30 நாட்கள் இலவசம்: ஏர்டெல் வழங்கும் 30 நாள் இலவச சேவை- எப்படி பெறுவது?

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம்

ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள சேவையில் புதிதாக ஒரு சேவை இணைக்கும் போது 30 நாட்கள் வரை இலவச சேவையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. ஜியோ அறிமுகம் செய்த குறுகிய நாட்களில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. காரணம் ஜியோ குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஜியோவுக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது இருக்கும் நிறுவனம் பாரதி ஏர்டெல்.

ஏர்டெல் ஒன் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது பாரதி ஏர்டெல். ஏர்டெல் சமீபத்தில் ஏர்டெல் பிளாக் என்ற அதன் தொகுக்கப்பட்ட சேவை சலுகையை அறிவித்தது. இது ஏர்டெல் ஒன் திட்டம் போன்றதாகும். ஏர்டெல் பிளாக் திட்டத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருவதையடுத்து, இந்த திட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி எடுத்து செல்ல நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. தற்போது ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் இலவச சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்துக்கு நிபந்தனைகளும் சலுகைகளும் உள்ளன.

ஏர்டெல் பிளாக் பயனர்கள்

ஏர்டெல் பிளாக் பயனர்களுக்கு 30 நாட்கள் இலவச சேவையை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் பிளாக் திட்டத்தின் கீழ் மூன்று சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் பிளாக் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் முதன்மை போஸ்ட்பெய்ட் இணைப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் டைரக்ட் டூ ஹோம் (டிடிஎச்) இணைப்பு, ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு ஆகிய இணைப்புகள் அல்லது இரண்டிலும் முதன்மை திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

30 நாட்கள் இலவச சேவை

ஏர்டெல்லில் 30 நாட்கள் இலவச சேவையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம், ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் இலவச சேவையை பெற முடியும். போஸ்ட்பெய்ட் மொபைல் சேவையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் டிடிஎச் இணைப்பு, ஃபைபர் இணைப்பு உட்பட ஏதாவது புதிய சேவையை இணைக்கும் போது ஒரு மாதத்திற்கு இலவச சேவை வழங்கப்படுகிறது.

ஃபைபர், டிடிஎச், மொபைல் ஆகிய சேவைகள்

வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பயன்பாட்டின் ஃபைபர், டிடிஎச், மொபைல் ஆகிய சேவைகளை ஒன்றாக இணைக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர் எண் மற்றும் ஒற்றை பில் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னணி வரிசையில் இருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை ஏர்டெல் பிளாக் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் ஆல் இன் ஒன் தீர்வை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதன் பல்வேறு சலுகைகளை ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.

பிராட்பேண்ட். டிடிஎச் என பல்வேறு சேவைகள்

இணைய சேவை, தொலைபேசி சேவை, பிராட்பேண்ட். டிடிஎச் என பல்வேறு சேவைகளுக்கும் தனித்தனியாக மாதமாதம் பில் கட்ட வேண்டிய நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் வெவ்வேறு வகையில் பில்கள் செலுத்த வேண்டிய அவசியம் இருந்தது. சமயத்தில் ரீசார்ஜ்கள் மறக்கப்படும் போது சேவைகள் துண்டிக்கப்படும் இது பயனர்களை உளைச்சலுக்கு உள்ளாக்கலாம். இந்த சிரமங்கள் பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வந்தது. வாடிக்கையாளர்களின் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் புதுமைப்படுத்தப்பட்ட முடிவை கொண்டு வந்துள்ளது.

ஏர்டெல் பிளாக் (Airtel Black)

ஏர்டெல் பிளாக் பயன்படுத்தும்போது ஒரு வாடிக்கையாளர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை ஒருங்கிணைக்க முடியும். அதாவது ஃபைபர், டிடிஎச், மொபைல் போன்ற சேவைகளை ஒரே பில்லில் பெறலாம். ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த தீர்வுகளை விளக்கமாக பார்க்கலாம். ஆல் இன் ஒன் திட்டம் ரூ.2099 என்ற விலையில் கிடைக்கிறது. இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 3 மொபைல் கனெக்ஷனை ஒருங்கிணைக்கலாம். மேலும் இதில் 1 ஃபைபர் இணைப்பு, 1 டிடிஎச் இணைப்பை பெறலாம். இது பெயர் குறிப்பிடுவது போல் ஆல் இன் ஒன் திட்டமாக இருக்கிறது.

2 மொபைல் இணைப்பு, 1 ஃபைபர் இணைப்பு

ஃபைபர் மற்றும் மொபைல் திட்டம் 2 மொபைல் இணைப்பு, 1 ஃபைபர் இணைப்பு ஆகியவைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. டிடிச் ப்ளஸ் மொபைல் இணைப்பு திட்டம் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இது 3 மொபைல் இணைப்புகளை வழங்குகிறது. மேலும் 1 டிடிஎச் இணைப்பையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

டிடிஎச் ப்ளஸ் மொபைல் இணைப்பில் மேலும் ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டம் விலை ரூ.998 ஆக இருக்கிறது. இது ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 2 மொபைல் இணைப்புகள் மற்றும் ஒரு டிடிஎச் இணைப்பை வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் திட்டம் குறித்த வழிமுறைகள்

ஏர்டெல் தேங்க் ஆப் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும். அதில் Get Airtel Black Plan அல்லது make your own plan என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களுக்கு சென்று ஏர்டெல் பிளாக் திட்டம் குறித்து விசாரித்தால் அனைத்து தகவலும் கிடைக்கும்.

மேலும் வீட்டில் இருந்தே சந்தேகங்களை நிவர்த்தி செய்ய 8826655555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஏர்டெல் ஊழியர்கள் உங்களை தொடர்புகொண்டு ஏர்டெல் பிளாக் குறித்து விவரிப்பார்கள்.

மேலும் கூடுதல் தகவல் அறிவதற்கு https://www.airtel.in/airtel-black என்ற தளத்தை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!