Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

உஷார்-மழை பெய்யும்போது சார்ஜ் செய்தபடி மொபைல் பயன்படுத்திய இளம்பெண்: ஒரே இடி, மொபைல் வெடித்து சிதறி உயிரிழப்பு

இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு

மழை நேரத்தில் வீட்டில் செல்போனை சார்ஜ் செய்தநிலையில் பயன்படுத்திக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இளம்பெண் ஒருவர் உயிரிழப்பு

பிரேசிலில் இளம்பெண் தனது தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது மின்னல் வெட்டியதால் போன் வெடித்து உயிரிழந்தார். இதுகுறித்த விவரங்களை பார்க்கும் போது, சம்பவம் நடந்த போது போன் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. வடக்கு பிரேசிலில் உள்ள சாண்டாரெம் நகரில் வசிப்பவர் ராட்ஜா ஃபெரீரா டி ஒலிவேரா, இவர் தனது வீட்டில் மின்சாரம் தாக்கி செல்போன் வெடித்து உயிரிழந்தார். அதேபோல் ஒலிவேரா தனது வீட்டில் மின்னல் தாக்கிய போது போன் பயன்படுத்திய நிலையில் இருந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிர் பிரிந்தது

ஒலிவேரா தனது வீட்டை மின்னல் தாக்கியபோது போன் பயன்படுத்தியதால் பாதிப்புக்கு உள்ளானார். ஒலிவேராவின் பெற்றோர் அவருக்கு முதலுதவி அளித்தபின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில், அவர் அழைத்து வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசிலிய மாநிலமான பாராவில் மின்னல் தாக்கி உயிரிழந்த மூன்றாவது நபர் ஒலிவேரா என தெரிவிக்கப்படுகிறது. ஒலிவேராவின் மரணத்திற்கு பிறகு நாட்டில் மக்கள் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்த வேண்டாம் என அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ஜ் செய்து கொண்டு மொபைல் பயன்படுத்தக் கூடாது

பொதுவாகவே சார்ஜ் செய்து கொண்டு மொபைல் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக மழை நேரத்தில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளவே கூடாது. காரணம் மழை நேரத்தில் மின்னல் இடி ஏற்படும் மின்சாரம் ஹை வோல்டேஜ், லோ வோல்டேஜ் நிலையை சந்திக்கை நேரும், திடீரென ஹை வோல்டேஜ் மின்சாரம் கிடைக்கும் போது எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு ஆபத்து என்பது கருத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக மொபைலை கையாள வேண்டும்

அதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக கருத்துக் கணிப்பு குறித்து தகவல்களும் வெளியாகின.

செல்போன் வெடிப்பதற்கான காரணம்

செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.

சாதனத்துக்கு தகுந்த சார்ஜர் அவசியம்

சார்ஜர் மாற்றுவதை தவிர்க்கவும் எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.

குறைந்த விலை பேட்டரி

குறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தடுக்கவும் மேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக