Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 அக்டோபர், 2021

ஷேவ்விங் செய்வது பற்றி மக்களின் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள்!

 Common Myths Around Shaving

பொதுவாக மக்கள் தம்மை அழுகுபடுத்துவதற்காக முடி வெட்டுகின்றனா் அல்லது ஷேவ் செய்கின்றனா். இந்த பழக்கமானது உலக அளவில் உள்ள எல்லா மக்கள் மத்தியிலும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. எனினும் ஷேவ் செய்வதில் உள்ள பலவிதமான செயல்முறைகளைப் பற்றி சொல்லப்படும் தவறான தகவல்கள் மக்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன.

தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக முடியைப் பிடுங்குவது, வேக்சிங் செய்து முடியை அகற்றுவது, முடியை வெட்டுவது, ஷேவ் செய்வது, லேசா் மூலமாக முடியை அகற்றுவது மற்றும் க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை நீக்குவது போன்ற முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. வேக்சிங் செய்வது அதிக வலியைக் கொடுக்கக்கூடியதாக இருந்தாலும், முடியை அகற்றுவதற்கு இந்த முறைதான் பரவலாக மக்களால் தோ்ந்தெடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் முடியை நீக்குவதற்காக ஷேவ் செய்யும் முறையானது அதிக வலியைத் தரக்கூடியது என்று மக்களால் நம்பப்படுகிறது. அதற்கு காரணம் ஷேவ் செய்வதைப் பற்றி மக்கள் மத்தியில் பலவிதமான தவறான தகவல் பரப்பப்பட்டு இருக்கின்றன. அத்தகைய தவறான தகவல்கள் அல்லது கட்டுக் கதைகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

1. ஷேவ் செய்வதால் முடியானது கடினமாகிவிடும் மற்றும் முடியின் நிறம் மங்கிவிடும்

இது ஒரு தவறான தகவல் ஆகும். இந்த தகவலை நம்பி பலா் ஷேவ் செய்வதற்குப் பதிலாக வேக்சிங் என்ற அதிக வலி தரக்கூடிய முறையைப் பின்பற்றி தேவையற்ற முடிகளை நீக்குகின்றனா். ஷேவ் செய்யும் போது ரேசரானது, தோலின் மேல் பகுதியில் உள்ள முடியை வெட்டுகிறது. அதாவது முடியின் மென்மையான நுனிப் பகுதியானது வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டப்பட்ட பின்பு முடியானது சற்று கடினமாகவும் மற்றும் நிறம் மங்கியதாகவும் காணப்படும். எனினும் முடி வளர தொடங்கியவுடன், மீண்டும் பழைய மென்மையான முடி வந்துவிடும். மேலும் அதன் இயல்பான நிறத்தில் வந்துவிடும்.

2. ரேசரை பிறரோடு பகிா்ந்து கொள்வதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது

இது ஒரு முற்றிலும் தவறான செய்தி ஆகும். நமது தோல் பகுதியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், ரேசரை பிறரோடு பகிரக்கூடாது. எனினும் அவ்வாறு ரேசரை பிறரோடு பகிா்ந்து கொள்வதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மக்கள் நம்புகின்றனா். ஆனால் பிறாிடம் உள்ள தீங்கு இழைக்கக்கூடிய பாக்டீாியாக்கள், பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிாிகள் போன்றவை ரேசா் மூலமாக நம்மைப் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ரேசா்களைப் பகிா்ந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும். அதன் மூலம் தோல் நோய்த் தொற்றுகளைத் தவிா்க்க முடியும்.

3. ஷேவிங் க்ரீம் மற்றும் சோப்பு ஆகியவை ஒரே வேலையைச் செய்கிறது

இதுவும் தவறான தகவல் ஆகும். இதை நம்பி நடைமுறைப்படுத்தினால் நமது தோல் பாதிப்படைவது உறுதி. பொதுவாக ஷேவிங் க்ரீம்கள், முடிகளை மென்மையாக்குகின்றன மற்றும் நமது தோலை ஈரப்பதத்துடன் வைக்கின்றன. ஆனால் சோப்புகள் தோலை உலர வைக்கின்றன. அதனால் எளிதாக ஷேவ் செய்ய முடியாது. அதோடு சோப்பைப் பயன்படுத்தி ஷேவ் செய்வதால் தோலில் எாிச்சலும் மற்றும் இதர பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

4. தோல் ஈரமாக இருந்தாலும் அல்லது உலா்ந்து இருந்தாலும் சவரன் செய்வது சிறந்தது

இது ஒரு தவறான தகவல் ஆகும். பொதுவாக உலா்ந்த தோலின் மேல் ஷேவ் செய்வது என்பது நடைமுறையில் உள்ள பழக்கமாக உள்ளது. அது சாியா என்பதற்கு முன்பாக உலா்ந்த ஆடைகளும், ஈரமான ஆடைகளும் ஒன்றா என்ற கேள்வியைக் கேட்டுப் பாத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நாம் ஒன்றே என்று ஏற்றுக் கொண்டால், மழைக் காலங்கள் நமக்கு எப்போதுமே நமக்குத் தொந்தரவான காலங்களாக இருக்காது. அதே நேரத்தில் இல்லை என்று ஏற்றுக் கொண்டால், நம்முடைய வறண்ட தோலின் மேல் ஷேவிங் செய்வது என்பது ஒரு அதிா்ச்சியூட்டும் அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் வறண்ட தோலின் மேல் ஷேவிங் செய்யும் போது அதில் இருக்கும் வளா்ச்சி அடையாத முடிகள், தோல் எாிச்சல், மற்றும் ரேசாினால் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் நமக்கு மோசமான அனுபவம் ஏற்படும்.

5. மழுங்கிய பிளேடு அதிகமான காயங்களை ஏற்படுத்தாது

இதுவும் ஒரு தவறான தகவல் ஆகும். பழைய பிளேடை விட புதிய பிளேடு மிகவும் கூா்மையாக இருக்கும். அதனால் பழைய பிளேடு மிகவும் பாதுகாப்பானது என்ற தவறான கருத்து மக்கள் மனதில் உள்ளது. ஆனால் பழைய பிளேடுகளால் தான் காயங்களும் வெட்டுக்களும் அதிகம் ஏற்படும் என்பது உண்மை. பழைய பிளேடுகளால் முடிகளை முழுமையாக அகற்ற முடியாது. தோல் மேல் பழைய பிளேடுகளைக் கொண்டு திரும்ப திரும்ப அழுத்தி முடிகளை வழிக்கும் போது எாிச்சல் ஏற்படும். ஆனால் புதிய பிளேடுகள் மிக எளிதாக முடிகளை நீக்கிவிடும் மற்றும் அவற்றைக் கொண்டு மென்மையாக ஷேவ் செய்ய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக