Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 அக்டோபர், 2021

இனி கூகுள் பே செயலியில் இதையும் செய்யலாம்- வந்தது புதிய அம்சம்., கிரெடிட் கார்ட் வச்சுக்கிட்டு அலைய வேணாம்!

கிரெடிட் கார்டுகள் அணுகல்ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆன்லைன் பண்ட் பிரிவில் கூகுள் பே என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கூகுள் பே-ல் உள்ள பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கும் வணிகர்களுக்கும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை வாசலில் க்யூ ஆர் கோட் வைத்து பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.

கிரெடிட் கார்டுகள் ஆதரவு

கூகுள் பே டெபிட் கார்டுகளை மட்டுமே ஆதரித்து வந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டுகளை ஆதரவு செய்து வருகிறது. கூகுள் பே-யை பயன்படுத்தி ஆதரிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இனி பரிவர்த்தனை செய்யும் போது யுபிஐ மூலமாகவே பிஷிக்கல் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். தங்கள் வங்கி கணக்கின் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிரெடிட் தொகை வரையறுக்கப்படும்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள்

கூகுள் பே-ல் கிரெடிட் கார்டு ஆதரவு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் அடுத்த சில நாட்களில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சில பயனர்கள் புதுப்பிப்பை பெற்றிருந்தாலும் கூட கூகுள் பே பயன்பாட்டில் கிரெட்டி கார்டை சேர்க்க இயலவில்லை என தெரிவிக்கின்றனர்.

கூகுள் பே-ன் சமீபத்திய பதிப்பு

தங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பே-ன் சமீபத்திய பதிப்பை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று கூகுள் பே தளத்தை செக் செய்து கொள்ளலாம். இதில் தங்கள் சுயவிவரப் படத்தை கிளிக் செய்து கட்டண முறைகள் என்ற தேர்வுக்குள் செல்ல வேண்டும். வங்கி கணக்கை இணைக்க என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். கிரெடிட் கார்டை இணைக்க கூகுள் பே கணக்கில் பயன்படுத்தும் அதே தொலைபேசி எண்ணை இதில் பயன்படுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டுகள் அணுகல்

முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்ட்கள் விசா மற்றும் மாஸ்டர் கார்ட்களாகவே வழங்கப்படுகிறது என்பதால் இது கூகுள் பே-ல் ஆதரிக்கப்படுகின்றன. கூகுள் பே தற்போது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட்கள், எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள், கோடக் வங்கி கிரெடிட் கார்ட்கள், எசிடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட்கள், இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்ட்கள், ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்ட்கள், ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார்ட்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெட்டி கார்ட்கள் உடன் ஆதரிக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு கட்டணத்தையும் செலுத்தலாம்

இதன்மூலம் கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி அனைத்து கொடுப்பனவுகளையும் செய்யலாம். உங்கள் கிரெடிட் கார்டு வழங்குனருக்கும் இதன்மூலம் கட்டணத்தை செலுத்தலாம். கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்த கூகுள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக தகவல்கள் ஏதும் இல்லை.

கூகுள் பே தளத்தில் எப்படி எஃப்டி-க்களை மேற்கொள்வது

கூகுள் பே செயலியில் சமீபத்தில் புதிய அம்சம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அது ஃபிக்சட் டெபாசிட் ஆகும். கூகுள் பே தளத்தில் எப்படி எஃப்டி-க்களை மேற்கொள்வது என்பது குறித்து பார்க்கலாம், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் கூகுள் பே ஆப்பை ஒபன் செய்யவும், பின் வணிகம் மற்றும் பில்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க கீழே செல்லும், இதில் ஈக்விடாஸ் வங்கி ஸ்மாட் விருப்பம் காண்பிக்கப்படும். Illisha Equitas SFB என்ற லோகோவை கிளிக் செய்ய வேண்டும். பின் ஃபிக்சட் டெபாசிட்டில் தங்கள் டெபாசிட் தொகையை தேர்ந்தெடுக்கவும், பின் கேஒய்சி விவரங்கள் ஆதார் எண், பேன் விவரம் உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டும். அதன்பின் கூகுள் பே யுபிஐ உடன் எஃப்டி அமைப்பு மேற்கொள்ளப்படும்.

கூகுள் பே எஃப்டி-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி
கூகுள் பே எஃப்டி-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி

கூகுள் பே எஃப்டி-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி என ஈக்விடாஸ் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதிர்ச்சியடையும் போது எஃப்டியின் முதன்மை தொகையும் வட்டியும் கூகுள் பே பயனாளியின் தற்போதைய வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தியாவின் அனைத்து வங்கியிலும் நேரடியாக வரவு வைக்கப்படும். அதேபோல் நேரம் முடிவதற்கு முன்பாக பணம் தேவைப் பட்டால் அதற்கும் வாய்ப்பு உண்டு. அதுவும் கூகுள் பே இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் திரும்பத் தரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக