Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 அக்டோபர், 2021

ஜியோ சேவை முடங்கியதா..? டிவிட்டரில் டிரெண்டாகும் #JioDown

ரிலையன்ஸ் ஜியோ சேவை

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி முடங்கிய போது டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளத்தில் மீம் மற்றும் கிண்டலான பதிவுகள் ஏராளமாகப் பகிரப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பல பகுதிகளில் இயங்கவில்லை.

இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் அடிப்படையான சேவைகள் கூடப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிவீட்டுகள் பறக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ சேவை

டிவிட்டரில் இந்திய அளவில் தற்போது #Jiodown ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சுமார் 1 மணிநேரமாக ஜியோ சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஜியோ வாடிக்கையாளர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். இதே நேரத்தில் பலர் தங்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் மட்டுமே என்பதால் வாடிக்கையாளர்களால் 3ஜி அல்லது 2ஜி அலைக்கற்றை மூலம் எவ்விதமான சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் வாயிலாகவே வாய்ஸ் கால் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

#JioDown ஹேஷ்டேக்

தற்போது டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் பாதிப்பை ஸ்கிரீன்ஷாட் உடன் சேவை முடக்கம் குறித்த தகவல்களைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஜியோ வாடிக்கையாளர் அல்லாத மக்களும் ஜியோ சேவை பாதிப்பைக் குறித்துப் பல பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பேஸ்புக் செயலி

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் முடங்கிய போது அனைவரும் டிவிட்டரில் சோகமாக பதிவிட்ட நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பிரச்சனை இண்டர்நெட்-ல் இல்லை, உங்கள் சாட்-கள் ரிபிரஷ் செய்வதை நிறுத்துங்கள் என டிவீட் செய்து கிண்டல் செய்தது.

நம்பர் 1

நம்பர் 1

டிவிட்டரில் இந்திய அளவில் தற்போது #Jiodown ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சுமார் 1 மணிநேரமாக ஜியோ சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஜியோ வாடிக்கையாளர்கள் டிவீட் செய்து வருகின்றனர். இதே நேரத்தில் பலர் தங்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

ஒரு மணிநேரம் ஆச்சு

ஒரு மணிநேரம் ஆச்சு

ஆயுஷ் என்பவர் ஒரு மணிநேரம் ஆச்சு நெட்வொர்க்-ஏ இல்லை, டீம் ஜியோ-விடம் இருந்து ஏன் இந்த நடத்தை..? ஜியோவிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என #jiodown #jiodead

@reliancejio @JioCare ஜியோ நிறுவன கணக்கையும், ஜியோ வாடிக்கையாளர் சேவை கணக்கையும் டேக் செய்துள்ளார்.

நன்றி அம்பானி

நன்றி அம்பானி

பியூஷ் என்பவர் ஜியோ சேவை முடங்கியதற்கு முகேஷ் அம்பானிக்கு நன்றி தெரிவித்துள்ளார். காலை முழுவதும் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டேன். அவர்கள் உண்மையிலேயே மிகவும் நல்லவர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இது தான் கர்மா

இது தான் கர்மா

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் முடங்கிய போது அனைவரும் டிவிட்டரில் சோமாக பதிவிட்ட நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பிரச்சனை இண்டர்நெட்-ல் இல்லை, உங்கள் சாட்-கள் ரிபிரஷ் செய்வதை நிறுத்துங்கள் என டிவீட் செய்து கிண்டல் செய்தது. இந்த டிவீட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இதுதான் கர்மா என பரியா என்பவர் டிவீட் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக