கூகிள் உங்களை கண்காணிக்கிறதா? வருடத்தில் 365 நாட்களும், மாதத்தில் 30 நாட்களும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து 24 மணி நேரமும், உங்களுடைய செயல்பாட்டைக் கூகிள் நிறுவனம் முழுமையாகக் கண்காணிக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பி தான் ஆகவேண்டும், ஏனெனில் அது தான் உண்மை. கூகுள் உங்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது. கூகிளுக்கு எல்லாமே தெரியும் என்று சொன்னது வெறும் பொது தகவலை பற்றியானது மட்டுமல்ல, உங்களை பற்றியுமானது தான்.
ஆம், நீங்கள் பயன்படுத்தும் கூகிளுக்கு உங்களைப் பற்றி எல்லாமே நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றி கூகிள் நிறுவனத்திற்கு எவ்வளவு தெரியும் என்பதை நீங்களே பார்வையிடவும் முடியும். குறிப்பாக, கூகிளுக்கு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்கிறீர்கள், எந்த வழியில் செல்கிறீர்கள், இணையத்தில் என்ன ஆர்டர் செய்தீர்கள் என்பதில் இருந்து நீங்கள் போன மாதம் என்ன-என்ன காரியங்களில் ஈடுபட்டீர்கள் என்பது வரை எல்லா விஷயங்களும் கூகிளுக்குத் தெளிவாகத் தெரியும். உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப் சாதனத்தில் இருந்து நீங்கள் என்ன-என்ன பார்வையிட்டார்கள் என்பதும் கூகிளுக்குத் தெரியும்.
கூகிள் அதன் யூசர்களின் ஒவ்வொரு கணக்கையும் மிகவும் பக்குவமாகக் கையாண்டு வருகிறது. கூகிளில் நீங்கள் பார்க்கும் தகவல் முதல், நீங்கள் பார்க்கும் விளம்பரம், வீடியோ போன்ற அனைத்து தகவல்களையும் ‘கூகிள்' தனது சேவையில் பதிவு செய்து வைக்கிறது. உங்களுடைய ஒட்டு மொத்த ஜாதகமும் டிஜிட்டல் வடிவத்தில் கூகுளில் இடம் உள்ளது என்று நாம் சுருக்கமாகச் சொல்லலாம். ஐயையோ, இது மிகவும் மோசமானதாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தாள், இதிலிருந்து தப்பிக்க சில விஷயங்கள் நீங்கள் செய்ய வேண்டும்.
அதைச் செய்தால் கூகிளின் கண்காணிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும். ஆனால், இதன் மூலம் நீங்கள் சில வசதியை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சரி, மாற்றத்திற்கான வழிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். உங்களுடைய கூகிள் அக்கவுண்டை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் மொத்தம் 6 பிரிவுகள் உங்களுக்குக் காட்டப்படும், இதில் முதல் இரண்டு பிரிவுகள் வெப் மற்றும் ஆப் செயல்பாடு தொடர்பானது. நீங்கள் தேடும் அனைத்து தகவல்களும் இதில் சேமிக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நீங்கள் கூகிள் மூலம் என்ன பார்த்திருந்தாலும் அது அதற்கான தேதி வாரியாக நேரம் வாரியாக நீங்கள் பயன்படுத்திய வரிசையில் காண்பிக்கப்படும். இப்போது நீங்கள் பில்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதற்குப் பின் டெலீட் பட்டனை கிளிக் செய்து கூகிள் சேமித்த தகவலை நீங்கள் டெலீட் செய்யலாம். அடுத்தபடியாக, அந்த பக்கத்தில் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானை க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் அக்கௌன்ட் உடன் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் டெலீட் செய்யலாம்.
இதை நீங்கள் செய்யாவிட்டாலும் உங்களின் தரவுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாகவே டெலீட் செய்யப்பட்டுவிடும். கூகுள் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதைப் பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளது. அதன் படி, ‘மூன்று மாதங்களுக்கு மேல் அல்லது 18 மாதங்களுக்கு மேல் உள்ள தகவல்களைக் கூகுள் தானாகவே டெலீட் செய்துவிடும்" என்று நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ‘கூகுள் அசிஸ்டன்ட்' பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமும் இங்கு உள்ளது. கூகிள் அசிஸ்டன்ட் வசதியும் உங்களைக் கண்காணிக்கிறது.
உங்கள் போனில் கூகிள் அசிஸ்டன்ட் வசதி ஆனில் இருக்கிறது என்றால், கூகிள் உங்களின் ஒட்டுமொத்த பேச்சையும் கண்காணிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கூகிள் அசிஸ்டன்ட் வசதியை ஆன் செய்ய உதவும் ட்ரிக்கர் வார்த்தைகளுக்காக இவை காத்துக்கொண்டிருக்கிறது. அதேபோல், நீங்கள் பேசும் வார்த்தைகளை வைத்து உங்களுக்கான விளம்பரங்களையும் கூகிள் உங்களுக்கு வழங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இது கேட்பதற்குச் சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உங்களின் பாதுகாப்பு பலமாகத் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது.
உங்களின் கூகிள் அசிஸ்டன்ட் எப்போதாவது உங்களுடைய உத்தரவுகளும் கோரிக்கைகளும் இல்லாமல் ஆக்டிவ் ஆகிறது என்றால், அது உங்களுக்கு ஒரு தொந்தரவாக இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தாள் அதை நீங்கள் நீக்கம் செய்யலாம். உங்கள் போனில் உள்ள கூகுள் அசிஸ்டன்ட் வசதி தேவையில்லை என்றால், அதையும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய படிப்படியான முறையைப் பின்பற்றுவதன் மூலம் அதை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் முடக்கலாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் அல்லது டேப்லெட்டில் ‘ஹே கூகிள் அல்லது "ஓகே கூகிள்" என்று சொன்னதும் உங்கள் கூகிள் அசிஸ்டன்ட் ஓபன் ஆகும். அதேபோல், "ஓபன் கூகிள் செட்டிங்ஸ்" என்று சொன்னால் அது உங்களை நேரடியாகக் கூகிள் அசிஸ்டன்ட் செட்டிங்ஸ் அறைக்கு அழைத்துச் செல்லும்.
இதில் ஆன் மற்றும் ஆஃப் வசதி இடப்பெற்றிருக்கும். அதில் ஆஃப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதிலிருக்கும் ‘ஆஃப்' என்ற விருப்பத்தை க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் கூகிள் அசிஸ்டன்ட்டை நீங்கள் துண்டிக்கலாம். இனி கூகிளால் நீங்கள் கண்காணிப்பட மாட்டீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக