Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 நவம்பர், 2021

108 தெரியும், 109 ஆம்புலன்ஸ் தெரியுமா? மாநில அரசின் புதிய பிளான்!

மனிதர்களை போல் கால்நடைகளுக்கும் விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னர், பசுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. நாட்டிலேயே முதல்முறை பசுவிற்கென அமைச்சகத்தை உருவாக்கி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச மாநில அரசு ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து பசு மருத்துவமனை, பசு ஆராய்ச்சி மையம், பசு பராமரிப்பு மையம் உள்ளிடவற்றை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கால்நடை மருத்துவத்துறை ஏற்பாடு

இந்நிலையில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இந்திய கால்நடை மருத்துவத்துறை சங்கம் சார்பில்சக்தி 2021” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பெண் கால்நடை மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பசுக்களின் சாணத்தை விலைக்கு வாங்கி அதிலிருந்து உரங்கள் மற்றும் வேறு சில பொருட்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஏராளமான நன்மைகள் தரும் பசுக்கள்

தற்போதைய அறிவியல் யுகத்தில் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து உரங்கள், பூச்சிக்கொல்லி, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை அரசே செய்தால் சிறப்புக்குரியதாக இருக்கும். பசுவின் சாணம் மற்றும் கோமியத்தால் நாட்டின் பொருளாதாரமே உயரும் என்று குறிப்பிட்டார். பொதுமக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள், விபத்தில் காயமடைவது போன்றவற்றிற்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை அமலில் இருந்து வருகிறது.

 .பி அரசின் புதிய திட்டம்

இதனை மத்திய அரசின் நிதியின் மூலம் மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. இதேபோல் கால்நடைகளுக்கு 109 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ஏனெனில் பசுக்கள், எருமைகள், காளைகள் உள்ளிட்டவை பல்வேறு நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. இவை கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

சில தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, அவசர தேவைக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கே செல்ல வேண்டியுள்ளது. அதற்கு கால்நடை ஆம்புலன்ஸ் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். பசுக்களுக்கு சரணாலயங்கள், தொழுவங்கள் அமைக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இவற்றிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த விஷயத்தை வெற்றிகரமாக நடத்தி காட்ட முடியும் என்று தெரிவித்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக