Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 நவம்பர், 2021

ஏமாற்றம் தந்த பேடிஎம்.. டிஸ்கவுண்டில் பட்டியல்.. 20% சரிவில் பங்கு விலை.. முதல் நாளே நஷ்டமா?

 டிஸ்கவுண்ட் விலையில் பட்டியல்

சமீபத்திய காலத்தில் ஐபிஓவில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் ஐபிஓ சந்தை பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 குறிப்பாக சமீபகாலமாக பொது பங்கு வெளியீடு செய்யப்படும் பங்குகள், பங்கு சந்தையில் பட்டியிடும்போதே, நல்ல லாபத்தில் "பிரீமிய விலையில்" பட்டியலிடப்பட்டு வருகின்றன.

இதுவும் ஐபிஓ-வில் முதலீடுகள் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஒரு எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தான் கடந்த வாரத்தில் பேடிஎம் ஐபிஓ வெளியீடு செய்யப்பட்டது.

விஸ்வரூபம் எடுக்கும் டிஜிட்டல் வளர்ச்சி

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. குறிப்பாக வங்கித் துறையில் பல தொழில் நுட்பங்கள் புகுந்துள்ளன. குறிப்பாக இன்று மக்களிடையே அதிகளவில் பயன்படுத்தப்படும் யுபிஐ சேவையாகும். இந்த சேவையை தான் பேடிஎம் நிறுவனமும் செய்து வருகின்றது.

இன்று பங்கு சந்தையில் பட்டியல்

டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைத் தளமான பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) நிறுவனம் கடந்த நவம்பர் 8 அன்று பங்கு வெளியீட்டினை செய்தது. இது நவம்பர் 10 அன்று முடிவடைந்தது. இதன் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 15, 2021 அன்று செய்யப்பட்டது. இதே டிமேட்களுக்கு பங்கு ஒதுக்கீடு நவம்பர் 17, 2021 அன்று செய்யப்பட்ட நிலையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.

டிஸ்கவுண்ட் விலையில் பட்டியல்

Paytm பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்தில் பி.எஸ்.இ-ல் 1955 ரூபாயாக தொடங்கியது. இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07% சரிவில் காணப்பட்டது. மேலும் இது 10 மணி நிலவரப்படி, 1806.65 ரூபாயாக காணப்பட்டது. இதே என்.எஸ்.இ-ல் இந்த சமயத்தில் 15.97% சரிவினைக் கண்டுள்ளது. என்.எஸ்.இ-ம் தொடக்கத்தில் 10% சரிவில் தான் பட்டியலிடப்பட்டது.

எவ்வளவு நிதி திரட்ட திட்டம்?

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவன, 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்தது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரப்படவுள்ளது. மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்பட்டது.

எவ்வளவு விண்ணப்பம்

பேடிஎம்மின் இந்த பங்கு வெளியீட்டில் 4.18 கோடி பங்குகளுக்கு எதிராக, 9.14 கோடி பங்குகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதே போல தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து, 2.79 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதே சில்லறை வர்த்தகர்கள் 1.66 மடங்கும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 24%மும் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போதைய நிலவரம் என்ன?

11.37 மணி நிலவரப்படி என்.எஸ்.இ-ல் 23.10% சரிந்து 1653.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 1955 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1586.35 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-ல் 21.64% சரிந்து, 1684.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்சம் 1961.05 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1586.25 ரூபாயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!