Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 18 நவம்பர், 2021

நீர் எதிர்ப்பு ஆதரவோடு மோட்டோ ஜி பவர் (2022): 3 கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை ரூ.14,700 மட்டுமே!

 50 மெகாபிக்சல் பிரதான கேமரா
மோட்டோ ஜி பவர் (2022) மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி ஆதரவோடு தொடங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மோட்டோ ஜி பவர் (2022)

மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனானது ஜனவரியில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி பவர் (2021) ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக இருக்கும். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.

50 மெகாபிக்சல் பிரதான கேமரா

மேலும் இந்த மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது துளை பஞ்ச் காட்சி வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் டிஸ்ப்ளேவின் மேல்புற மையப் பகுதியில் செல்பி கேமரா கட்அவுட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி பவர் (2022) பின்புற கைரேகை சென்சார் வசதியோடு வருகிறது. இந்த சாதனம் கடினமான பின்புற பேனலை கொண்டிருக்கிறது.

மோட்டோ ஜி பவர் (2022) விலை விவரங்கள்

மோட்டோ ஜி பவர் (2022) விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். புதிய மோட்டோ ஜி பவர் (2022) அமெரிக்காவில் 199 டாலர் மற்றும் 249 டாலர் ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.14,700 மற்றும் ரூ.18,400 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் ரிபப்ளிக் வயர்லெஸ் மற்றும் டி-மொபைல்ஸ் தளத்தின் மூலம் மெட்ரோ பகுதிகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெரிசோன், பூஸ்ட் மொபைல்ஸ் போன்ற தளங்களில் கிடைக்கும். மோட்டோ ஜி பவர் (2022) மாடல் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெஸ்ட் பய், அமேசான் மற்றும் மோட்டோரோலா யூஎஸ் தளத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் கனடாவில் புதிய மோட்டோ ஜி பவர் (2022) வரும் மாதங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

மோட்டோ ஜி பவர் (2022) விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1600 பிக்சல்கள்) தீர்மானத்தோடு வருகிறது. ஐபிஎஸ் டிஎஃப்டி எல்சிடி டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி விகிதத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி உடன் 4 ஜிபி ரேம் ஆதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது.

கேமரா அம்சங்கள் குறித்த விவரங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்புகள் இருக்கிறது. இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா f/1.8 துளை அம்சத்தோடு வருகிறது. அதேபோல் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் வசதியோடு வருகிறது. அதேபோல் பின்புற கேமரா அமைப்பு ஒற்றை எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா அம்சங்களில் ஹைப்பர்லேப்ஸ், டூயல் கேப்சர் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்பக்கத்தில் மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனானது f/2.0 லென்ஸ் அம்சத்தோடு 8 மெகாபிக்சல் கேமரா பொறுத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி பேக் அப்

மோட்டோ ஜி பவர் (2022) ஸ்மார்ட்போனானது 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பேக் அப் ஆதரவை கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இது ப்ளூடூத் வி5 , வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதன் எடை 203 கிராம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக