
ஏர்டெல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது அந்நிறுவனம் 5ஜி சோதனையை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனஙங்களும் 5ஜி சோதனையை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.129 திட்டம்
இப்போது ஏர்டெல் நிறுவனம் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கும் நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஏர்டெல் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன்,இலவச ஹெல்லோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட நன்மைகளும் இந்த ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ் நன்மையை பயன்படுத்திய பின்பு நீங்கள் அனுப்பும் எஸ்எம்எஸ்-க்கு கட்டணம் வசூல்செய்யப்படும். மேலும் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 70ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Shaw Academy, Wynk Music மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. கண்டிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல
நன்மைகள் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ்உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக்,Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல்,இலவச ஹலோ ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உள்ளன. மேலும் விரைவில் ஏர்டெல் நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக