
உதாரணத்திற்கு ஐ எஃப் எஸ் சி கோடு தவறாக போட்டிருக்கலாம். வங்கி கணக்கு நம்பரை தவறாக பதிவிட்டு இருக்கலாம். இப்படி பல பிரச்சனைளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் செய்வதறியாது தவித்திருப்போம்.
வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்று பணம் அனுப்பிய காலம் போய், இன்று ஆன்லைன் வங்கி மூலமே நிமிடங்களில் பணத்தினை அனுப்ப முடியும். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதிலும் சென்னை, பெங்களூரு போன்ற பெரு மாநகரங்ளில், நீங்கள் வாங்கும் பால், காய்கறிக்களுக்கு கூட யுபிஐ மூலமாக பணம் அனுப்பிவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
பணம் திரும்ப தாமதம்ஆனால் எந்தளவுக்கு விரைவில் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்கிறோமோ? அதற்கு எதிராக இந்த பரிவர்த்தனைகளில் பிரச்சனைகள் என்றால் உங்கள் பணம் உங்களுக்கு திரும்ப தாமதமாகிறது. குறிப்பாக பல வங்கி வாடிக்கையாளர்கள் இந்த ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது, இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கலாம்.
11 இலக்க ஐ எஃப் எஸ் சி கோடானது (Indian Financial System Code), வங்கிக் கிளைகளை தனியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு கோடு ஆகும். இதில் முதல் 4 இலக்கங்கள் வங்கியையும், அதனை தொடர்ந்து பூஜ்ஜியம் மறும் கடைசி 6 இலக்க எண்கள் வங்கியின் எந்த கிளை என்பதையும் பிரதிநிதித்துவபடுத்துகின்றன.
அனுப்புவதற்கு முன்பு சரிபாருங்கள்
ஆன்லைன் சேவையான NEFT, RTGS, IMPS, UPI போன்ற பல வழிகளைப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். இதில் எல்லா வழிகளிலுமே பணப்பரிமாற்றம் செய்யும்போது தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, பணம் அனுப்புபவருடைய வங்கிக் கணக்கிலிருந்து, மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது, பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கின் ஐ.எஃப்.எஸ்.சி கோடினை சரிபாருங்கள். ஐ.எஃப்.எஸ்.சி கோடு மட்டும் அல்ல, அவரது பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், யு.பி.ஐ ஐடி போன்ற விவரங்களை ஒருமுறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக ஆன்லைன் பரிவர்த்தனைகளின்போது IFSC கோடினை தவறாக கொடுத்தால், அதே வங்கியின் வேறு கிளையின் கோடாக இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்படும். பொதுவாக இதுபோன்ற விவரங்கள் பொருந்தவில்லை எனில், உங்களது பரிவர்த்தனை ரத்தாகும். எனினும் சில நேரங்களில் வேறு வாடிக்கையாளர்கள் இதே எண்ணைக் கொண்டிருந்தால் உங்களது பரிவர்த்தனை தொடரும். ஓரு வேளை இந்த எண்ணில் வேறு வாடிக்கையாளர் இல்லாவிட்டால், நீங்கள் பரிவர்த்தனை செய்த தொகையானது தானாகவே உங்கள் கணக்கிற்கு திரும்பும். இது வங்கிகளை பொறுத்து எவ்வளவு நாள் என்பது மாறுபடும்.
இதே நீங்கள் வங்கி கணக்கு நம்பரை தவறாக குறிப்பிட்டு, அதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்பட்டுவிட்டால், அப்படிப்பட்ட ஒரு வங்கிக் கணக்கு எண்ணோ, யு.பி.ஐ ஐடியோ இல்லையெனில் பணம் மீண்டும் திரும்பிவிடும். இதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் அவ்வாறு கிரெடிட் ஆகவில்லை எனில், வங்கிக்கு சென்று புகார் அளிக்கலாம். வங்கி தக்க நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் திரும்ப கிரெடிட் செய்துவிடும்.
இவ்வாறு தவறான பரிவர்த்தனைகளை செய்துவிட்டால் பதற்றப்படாமல், அதற்கான ஆதாரத்தினை எடுத்து வையுங்கள். உதாரணத்திற்கு பரிவர்த்தனை செய்த பிறகு வரும் மெசேஜ்ஜினை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இது பிரச்சனை என வரும்போது பெரிதும் கைகொடுக்கும்.
தவறாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்குக்கு உரியவர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணத்தை திரும்ப எடுப்பதற்கு ஒப்புதலை தரவில்லை என்றாலோ, அந்தப் பணத்தை எடுத்து செலவழித்துவிட்டாலோ அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்கலாம். ஆக எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக