சிரிக்க மட்டுமே....!!
----------------------------------------------
பிச்சைக்காரர் : அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை.
வீட்டுக்காரம்மா : பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது.
பிச்சைக்காரர் : 😲😲
----------------------------------------------
டாக்டர் : ஐயையோ! ஸ்கேன்ல உங்க குடலையே காணோமே?
நோயாளி : நீங்க தானே டாக்டர் காலி வயித்துல ஸ்கேன் எடுக்க சொன்னீங்க...!
டாக்டர் : 😳😳
----------------------------------------------
சமையல் ரகசியங்கள்...!!
----------------------------------------------
🍲 அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்கவிட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.
🍪 ஆரோக்கியமான சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயக் கீரையை வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி.
----------------------------------------------
குறளும், விளக்கமும்...!!
----------------------------------------------
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள் :
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
----------------------------------------------
இன்றைய கடி...!!
----------------------------------------------
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
தொப்பை...🚶
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக