கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையான மோல்னுபிரவீர் கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும் இறப்பையும் குறைக்கும் என்று, இந்த மருந்தை தயாரித்த மருந்து நிறுவனமான மெர்க் (Merck) கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மோல்னுபிரவீர் இன்னும், அமெரிக்காவில் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறவில்லை என்றாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த மருந்தை வாங்குவதற்கான அர்டர்களை வழங்கியுள்ளது.
இப்போதைக்கு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் குறைந்தது எட்டு நாடுகள், இந்த மருந்தை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன அல்லது மருந்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளன. இந்த நாடுகளில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும்.
மெர்க் (Merck) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை நாடியுள்ளது. அங்கீகாரம் வழங்கப்பட்டால், காப்ஸ்யூல் வடிவிலான இந்த மாத்திரை, COVID-19 க்கு எதிரான முதல் வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைக்கான மருந்தாக இருக்கும்.
இதனை தடுப்பூசிக்கு மாற்றாக பலர் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் கருதுவதால், இது இன்னும் சிறந்த பாதுகாப்பை வழங்கும் நிபுணர்களுக்கு இது ஒரு கவலையாக இருக்கிறது.
மோல்னுபிரவீர் (Molnupiravir), கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்கள் உயிரை காப்பாற்றுவதிலும் பெரிதும் உதவும் எனவும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு நோயாளிக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் மோல்னுபிரவீர் மாத்திரை எடுத்துக் கொள்ள தொடங்கலாம் என கூறப்படுகிறது. மத்திரை அட்டையில் நான்கு 200 மில்லிகிராம் காப்ஸ்யூல்கள் இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஐந்து நாட்களுக்கு, மொத்தம் 10 மாத்திரைகள் தேவைப்படும்.
மோல்னுபிரவீர் பெற்ற நோயாளிகளில் இறப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. ஆய்வில் இந்த மாத்திரை பயன்படுத்தியவர்கள் எவரும் இதுவரை மற்ற தடுப்பூசிகளைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.
இது நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டால், நோய் தீவிரமடையாது என்பதால், மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகள் அதிக அளவில் வருவதை தவிர்க்கலாம். மேலும், தடுப்பூசிகள் மிக குறைவான அளவில்போடப்பட்டுள்ள இடங்களில் இதனைப் பயன்படுத்தலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது ஏழை மற்றும் நடுத்தர நிலையிலான நாடுகளிலும் பயன்படுத்தலாம் எனவும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக