Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஜனவரி, 2022

எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்... இது எப்படி இருக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ------------------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
 ------------------------------------------------------------------
விமலா : என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருஷன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு..
அமலா : ஏன்?
விமலா : வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்.
அமலா : 😂😂
 ------------------------------------------------------------------
அமலா : என் புருஷன் கூட சண்டை போட பயமா இருக்கு.
விமலா : ஏன்... அடிச்சுப் புடுவாரா?
அமலா : இல்ல சமையல்ல உப்ப அதிகமா போட்டு பழிவாங்குவாரு.
விமலா : 😉😉
 ------------------------------------------------------------------
ஹைக்கூ கவிதை...!!
 ------------------------------------------------------------------
இன்றுடன் உலகம் அழிகிறது!
முழு விபரம் நாளைய நாளேட்டில்!

ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை... மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக!

பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம்.

சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி 'சமமா பிரிச்சுக்கலாம்" என்றான்.
 ------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
 ------------------------------------------------------------------
மனிதன் : ஏன் பெண்ணை அழகாக படைத்தாய்? 

கடவுள் : நீ அவளை காதலிக்க வேண்டுமென்பதற்காக.

மனிதன் : பிறகு ஏன் அவர்களை முட்டாள்களாக படைத்தீர்கள்? 

கடவுள் : அவர்கள் உன்னை காதலிக்க வேண்டுமென்பதற்காக.😌😎😇
 ------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
 ------------------------------------------------------------------
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

பொருள் : 

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
 ------------------------------------------------------------------
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்!!
 ------------------------------------------------------------------
😊 கவலைகளை விட்டொழியுங்கள்... மகிழ்ச்சியாய் இருங்கள்.

😊 ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்.

😊 பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்.

😊 கவலையும், துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்.

😊 துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்.

😊 பயமும், சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்.

😊 எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்.

😊 அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

😊 ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

😊 பசிக்கும் போது உணவருந்துங்கள்... பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக