Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

இந்த ஊர் கடலைமிட்டாயின் சுவையே தனி... கண்டுபிடிச்சிடீங்களா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------
பாபு : என்னங்க இது... உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான்?
கோபு : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான்..
பாபு : 😛😛
-------------------------------------------------
ரமேஷ் : நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறாரு?
சுரேஷ் : 10 நிமிஷத்துக்கு முன்பு அவர் மனைவியோடு போன்ல பேசினார். அவ்ளோதான் ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்.
ரமேஷ் : 😂😂
-------------------------------------------------
கிச்சன் டிப்ஸ்...!!
-------------------------------------------------

பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும்போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களை செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
-------------------------------------------------
இந்த குறிப்பை வைத்து பதில் சொல்லுங்க...!!
-------------------------------------------------

1. மாம்பழம் என்றால் நினைவுக்கு வரும் ஊர்...

2. மல்லிகைப்பூ மணக்கும் ஊர்...

3. இந்த ஊர் அல்வாவை சுவைக்க வேண்டும்...

4. தலையாட்டி பொம்மை ஆடும் ஊர்...

5. இந்த ஊரில் முறுக்கு பிரபலம்...

6. பட்டாசு தயாரிக்கும் ஊர்...

7. பட்டுப்புடவைக்குப் பெயர்போன ஊர்...

8. இந்த ஊர் கடலைமிட்டாயின் சுவையே தனி...

9. வெண்ணெய்க்கு புகழ்பெற்ற ஊர்...

10. ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்...

விடை :

🍋சேலம்

🌼மதுரை

🍮திருநெல்வேலி

🎭தஞ்சாவூர்

🍥மணப்பாறை

🎉சிவகாசி

👗காஞ்சிபுரம்

🍭கோவில்பட்டி

🍧ஊத்துக்குளி

🐃அலங்காநல்லூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக