Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

மனைவி போனை எடுக்காததால் 5 வயது மகன் மீது சரமாரி தாக்குதல் - கொடூர தந்தை கைது..

கோவை.

கோவை மாவட்டம்  மதுக்கரையில் 5 வயது மகனை தந்தையே  கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை மதுக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவரது மனைவி ரெஜினா பானு் இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகமது அசாருதீன் (10) முகமது அர்சத்தீன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுவுடனும், இளைய மகன் சாதிக் பாஷாவுடனும் வசிக்கின்றனர்.

இந்நிலையில் இளையமகன் அர்ஷத்தீனை, சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோ குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாதிக் பாஷாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் இருந்த நிலையில்,  இளைய மகனை ரெஜினா  பானுவை சந்தித்து பேசியதாகவும் இதனால்  ஆத்திரத்தில் மகனை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

அடிக்கடி மது போதையில் வந்து 5 வயது மகனை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கி வருவதாகவும் அப்பகுதி மக்களும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக்பாட்ஷாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!