Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

ஒன்னு கூட பாக்க முடியாது... விமானங்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

ஒன்னு கூட பாக்க முடியாது... விமானங்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

விமானங்களுக்கு ஏன் கருப்பு பெயிண்ட் அடிப்பதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உலகில் உள்ள பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன? என்பதை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே வாசகர்களுக்கு தெரிவித்துள்ளது. அந்த செய்தியை நீங்கள் ஒருவேளை படிக்க தவறியிருந்தால், இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

சரி, விமானங்கள் ஏன் ஒருபோதும் கருப்பு நிறத்தில் மட்டும் பெயிண்ட் செய்யப்படுவதில்லை? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். உலகில் கருப்பு நிற விமானங்கள் இல்லாமல் இல்லை. விதிவிலக்காக ஒரு சில விமானங்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றன. ஏர் நியூசிலாந்து நிறுவனத்தை இதற்கு ஓர் உதாரணமாக சொல்ல முடியும்.

ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானங்கள் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இதை தவிர்த்து விட்டு பார்த்தால், பெரும்பாலான வர்த்தக விமானங்கள் கருப்பு நிறத்தில் இருக்காது. அது ஏன்? என்பதற்கான காரணங்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி வாருங்கள், செய்திக்குள் செல்லலாம்.

கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சும் என்பதுதான் முதல் காரணம். அதிக வெப்ப நிலையை விட குறைவான வெப்ப நிலையில் விமானங்கள் சிறப்பாக இயங்கும். வானத்தில் பறக்கும்போது விமானங்கள் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தால் மிக அதிக வெப்பத்தை உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விமான பாகங்களின் மீது இது அழுத்தத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான விமானங்களில் கருப்பு நிறத்தை தவிர்ப்பதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்று. அதேபோல் விமானத்தின் கேபினுக்குள் அதிக வெப்பம் உறிஞ்சப்பட்டால், சூடு அதிகமாகி விடும். கேபினுக்குள் அதிக வெப்பம் உறிஞ்சப்பட்டால், பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும்.

எனவே பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை உறுதி செய்வதற்காகவும் விமானங்களில் கருப்பு நிறம் தவிர்க்கப்படுகிறது. இந்த காரணத்திற்காகதான் விமானங்கள் இலகுவான வண்ணத்தில் (Light Color) பெயிண்ட் செய்யப்படுகின்றன. சூரிய வெளிச்சம் ரெஃப்லெக்ட் (Reflect) ஆகி விட வேண்டும் என்ற காரணத்திற்காகதான் பெரும்பாலான விமானங்களில் இலகுவான வண்ணம் பயன்படுத்தப்படுகிறது.

ஆம், இலகுவான வண்ணங்கள் சூரிய வெளிச்சத்தை ரெஃப்லெக்ட் செய்து விடும் தன்மை உடையவை. எனவே கேபினுக்குள் வெப்பம் உறிஞ்சப்படாது. ஆனால் கருப்பு நிறம் இதற்கு எதிர்மாறாக செயல்படும். அதாவது கேபினுக்குள் அதிக வெப்பத்தை உறிஞ்சி கொள்ளும். விமானங்களில் கருப்பு நிறம் தவிர்க்கப்படுவதற்கு இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன.

கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்போது, கருப்பு பெயிண்ட்டின் மேற்புற வெப்பநிலை 200 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்கின்றனர். எனவே விமானம் கருப்பு நிறத்தில் இருந்தால், பயணிகளால் சௌகரியமாக பயணம் செய்ய முடியாது. பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

இதுதவிர கருப்பு நிறம் உலகின் பல்வேறு நாடுகளில் எதிர்மறையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நல்ல காரியங்களுக்கு செல்லும்போது கருப்பு நிற உடைகளை அணிவதை பலர் தவிர்ப்பதை இதற்கு ஒரு உதாரணமாக கூற முடியும். எனவே பயணிகள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பெரும்பாலான நிறுவனங்கள் கருப்பு நிறத்தை தவிர்த்து விடுகின்றன.

விமானங்கள் கருப்பு நிறத்தில் இருந்தால், இரவு நேரங்களில் பார்வைக்கு எளிதாக புலப்படாது என்பது, கருப்பு நிறம் தவிர்க்கப்பட்டு வருவதற்கு மற்றுமொரு முக்கியமான காரணம். இங்கே உதாரணத்திற்கு கார்களை எடுத்து கொள்ளலாம். வெள்ளை, கருப்பு ஆகிய இரண்டு நிற கார்களை எடுத்து கொண்டால், கருப்பு நிற கார்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் சொல்லப்போனால் கருப்பு நிற கார்கள் அபாயகரமான ஒன்றாக கருதப்படுகின்றன. இரவு நேரத்தில் கருப்பு நிற கார்களை பார்ப்பது கடினம் என்பதுதான் இதற்கு காரணம். மற்ற டிரைவர்களால் எளிதாக பார்க்க முடியாது என்பதால்தான், கருப்பு நிற கார்கள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறங்களின் பார்வையில் உள்ள இந்த தன்மை விமானங்களுக்கும் பொருந்தும். விமானங்கள் கருப்பு நிறத்தில் இருந்தால், இரவு நேரங்களில் அவற்றை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனாலும் விமானங்களை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்வதை, உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக