Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 மார்ச், 2022

பத்தே நிமிடத்தில் சூப்பரான டேஸ்ட்டியான சில ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட டிப்ஸ்

Snacks

மாலைப் பொழுதில் ஒவ்வொரு இந்தியரும் நாவுக்கு சுவையான ஏதேனும் ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். கடைகளில் ஆரோக்கியமற்ற வகையில் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யக் கூடும். ஆகவே, வீடுகளிலேயே சுத்தமான முறையில் நாமே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம். வீட்டில் நாமே செய்வதால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என எண்ண வேண்டாம். 10 நிமிடங்களில் உங்கள் நாவுக்கு இதமான ஸ்நாக்ஸ் வகைகள் சிலவற்றை நீங்களே செய்து கொள்ள முடியும். அதற்கான டிப்ஸ் இந்த செய்தியில் இருக்கிறது.

வழக்கமான சில ஸ்நாக்ஸ் வகைகள் உங்களுக்கு ஃபோர் அடித்திருக்கும். ஆகவே, கொஞ்சம் மாறுதல்களுடன், அதே சமயம், தனித்தன்மையுடன் சுவை தரக் கூடிய ஸ்நாக்ஸ் வகைகளாக இவை இருக்கும்.

ஃப்ரூட் சாட்

பழங்கள் சுவையானவை என்பது மட்டுமல்லாமல், அவை ஆரோக்கியமானவையும் கூட. ஆகவே, பலவகை பழங்களை ஒன்றாக கலந்து, அதில் சில மசாக்களை சேர்த்துக் கொள்வதன் மூலமாக ஃப்ரூட் சாட் செய்துவிடலாம். நாள் முழுவதும் பணி செய்து முடித்த உங்களுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஆக இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 1

ஆப்பிள் - 1

ஆரஞ்சு - 1

பேரிக்காய் - 1

ஸ்ட்ராஃபெர்ரி - 5

பெப்பர் தூள் - ¼ டீ ஸ்பூன் அளவு

சாட் மசாலா - ½ டீ ஸ்பூன் அளவு

உப்பு - ¼ டீ ஸ்பூன்

சீரக தூள் - ¼ டீ ஸ்பூன்

புதினா - 5

எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன் அளவு

செய்முறை

அனைத்து வகை பழங்கங்களையும் நறுக்கி, அவற்றை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் பெப்பர் தூள், சாட் மசாலா, உப்பு, சீரகத் தூள் மற்றும் புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.

பழங்கள் நசுங்கிவிடாமல் குலுக்கி, நன்றாக கலக்கவும்.

இறுதியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

இப்போது சுவையான ஃப்ரூட் சாட் தயார் ஆகிவிட்டது.


உருளை சாட்

உருளை கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது. சில நிமிடங்களில் செய்துவிடக் கூடிய ஆளு சாட் ரெசிஃபி செம டேஸ்ட்டாக இருக்கும். இதில் சுவையை அதிகரிக்க நீங்கள் ஸ்வீட் பொடேட்டோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

வேக வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு - 16

நறுக்கிய வெங்காயம் - ¼ கப் அளவு

நறுக்கிய தக்காளி - ¼ கப் அளவு

எலுமிச்சை சாறு - 1 ½ ஸ்பூன்

சாட் மசாலா - 1 டீ ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உருளைக் கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். அதை பெரிய பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும்.

இப்போது எலுமிச்சை சாறு, சாட் மசாலா, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது, நீங்கள் பரிமாறுவதற்கு ஆளு சாட் தயார் ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக