Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 22 மார்ச், 2022

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? பயனுள்ள டிப்ஸ்... -

------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
------------------------------------------
விமல் : என் மனைவி இட்லி பண்ணா மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்..
கமல் : அப்படியா?
விமல் : ஆமாம், மீந்து போன இட்லிய தொடுத்து தலை-ல வெச்சிப்பானா பாத்துக்கோங்க!
கமல் : 😨😨
------------------------------------------
ராமு : தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா...
சோமு : என் மேல இவ்வளவு அன்பா உனக்கு?
ராமு : அதெல்லாம் ஒண்ணுமில்லடா... தினமும் காலையில நரி ஊளையிடறத கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க... அதான் உன்ன போன் பண்ண சொன்னேன்...
சோமு : 😠😠
------------------------------------------
வாழ்க்கை தத்துவம்...!!
------------------------------------------
வாழ்க்கை ஒரு பயணம்... அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

வாழ்க்கை ஒரு உறுதிமொழி... அதனை நிறைவேற்றுங்கள்.

வாழ்க்கை ஒரு காதல்... அதனை அனுபவியுங்கள்.

வாழ்க்கை ஒரு அழகு... அதனை ஆராதியுங்கள்.

வாழ்க்கை ஒரு உணர்வு... அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம்... அதனை எதிர்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு குழப்பம்... அதனை விடை காணுங்கள்.

வாழ்க்கை ஒரு இலக்கு... அதனை எட்டிப் பிடியுங்கள்.
------------------------------------------
இன்றைய அழகு குறிப்புகள்...!!
------------------------------------------
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 

தினமும் பாலுடன் கொஞ்சம் பேரீச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைதல் குறையும்.

பீட்ரூட்டை ஒரு துண்டு எடுத்து உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும். உங்கள் உதடு மிகவும் அழகாக இருக்கும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருக்கம் மறையும்.

அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!