Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 மார்ச், 2022

ஐஃபோன் பெயரை மாற்ற வேண்டுமா? எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் ஆப்பிள் ஐஃபோனை வாங்கி முதன் முதலில், பயன்படுத்த தொடங்கும்போது, உங்கள் ஃபோனின் அடையாளப் பெயராக நிறுவனம் வழங்கும் பெயர் ‘ஐஃபோன்’ என்பது மட்டுமே. உங்கள் ஃபோன் பெயரை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் என்பதால் இது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், ஒரே பகுதியில் எண்ணற்ற டிவைஸ்கள் ‘ஐஃபோன்’ என்ற ஒரே பெயரில் பயன்படுத்தப்படும்போது குழப்பம் ஏற்படும்.

‘ஏர் டிராப்’ பயன்படுத்தி டேட்டா எக்ஸ்சேஞ்ச் செய்யும்போதும் ப், தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தும்போதும், ஒரே பெயரில் குழப்பம் நிலவும் காரணத்தால் உங்கள் டிராக் எது என்பதை நீங்கள் இழக்கக் கூடும்.

டிபால்ட் செட்டிங்கில் உள்ள உங்கள் ஃபோன் பெயரை மாற்றுவதன் மூலமாக இந்தச் சிக்கல்களுக்கு நீங்கள் தீர்வு காண முடியும். அதேவேளையில், ஐஃபோன் பெயரை மாற்றும் நடவடிக்கையை நீங்கள் எந்தவித குறுக்குவழியும் பின்பற்றாமல் நேரடியாகவே செய்துவிட முடியும்.

பெயர் மாற்றும் வழிகள் :

உங்கள் ஐஃபோன் டிவைசின் பெயரை மாற்றுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. உங்கள் ஃபோனின் செட்டிங்ஸ் ஆப் மூலமாகவே நீங்கள் பெயரை மாற்ற முடியும். அதேபோன்று, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைக்கும் போதும் அதன் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், உங்களுடைய அனைத்து டிவைஸ்களும் ஒரே மாதிரியான பெயரை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஃப்ளூடூத் சாதனங்களின் பெயரையும் கூட மாற்றிக் கொள்ளலாம். டிவைஸ் பெயரை மாற்றுவதால், ஏற்கனவே உள்ள மற்ற செட்டிங்க்ஸ் பாதிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வழிமுறைகள் :

* உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேட் டிவைசில் செட்டிங்க்ஸ் செல்லுங்கள். ஸ்க்ரோல் டவுன் செய்து, ஜெனரல் என்பதை தேர்வு செய்யுங்கள்.

* டிஸ்பிளே செய்யப்படும் மெனுவில் எபவுட் என்பதை தேர்வு செய்து, அதில், உள்ள பெயரை டச் செய்யவும்.

* உங்கள் டிவைஸ் பெயருக்கு அடுத்து உள்ள கிராஸ் பட்டன் அழுத்தவும். இப்போது உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேட் டிவைசுக்கு பெயர் சூட்டி, கன்பார்ஃம் செய்யவும்.

* டிவைஸ் பெயரை இன்னும் அழகானதாக, உங்கள் மனதுக்கு பிடித்தமான வகையில் மாற்ற வேண்டும் என்று நினைத்தால், கீபேடில் உள்ள எமோஜியை கிளிக் செய்யவும்.

* அழகான எமோஜிகளை தேர்வு செய்து பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ளூடூத் டிவைஸ் பெயர் மாற்ற :

* உங்கள் டிவைஸ் செட்டிங்க்ஸ் ஆப் சென்று, ப்ளூடூத் என்பதை தேர்வு செய்யவும்.

* உங்களிடம் இருக்கும் ப்ளூடூத் டிவைஸ்களை அது பட்டியலிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டிவைஸ் தேர்வு செய்யவும்.

* நேம் மீது டேப் செய்து, கிராஸ் பட்டன் அழுத்தவும். இப்போது புதிய பெயர் சூட்டி, அதை உறுதி செய்ய டேப் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக